mamtha

மம்தா பானர்ஜி அதிரடி நீக்கம்: திரிணமூல் அதிருப்தி தலைவர்கள் நடவடிக்கை

77 0

கொல்கத்தா: மே.வங்க முன்​னாள் முதல்வரும், திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான மம்தா பானர்ஜியை கட்​சித் தலை​வர் பதவியி​லிருந்து நீக்​கி​யுள்​ள​தாக ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்தி குழு​வினர் அறி​வித்​தனர்​.

கொல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில், ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸின் அதிருப்தி எம்.எல்.​ஏக்​கள் மற்​றும் நகராட்சி மாமன்ற உறுப்​பினர்​களின் (கவுன்​சிலர்​கள்) அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி​யள​வில் நடை​பெற்ற இந்​தச் சிறப்​பு கூட்​டத்​தில் கொல்​கத்​தா, பஹரம்​பூர், உத்​தர்​பா​ரா, ஸ்ரீராம்​பூர், டம் டம் உள்​ளிட்ட பல்​வேறு நகராட்​சிகளைச் சேர்ந்த சுமார் 40-க்​கும் மேற்​பட்ட கவுன்​சிலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

இக்​கூட்​டத்​தின் முடி​வில், அகில இந்​திய திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் 10 பேர் கொண்ட புதிய தேசிய செயற்​குழு ஒரு​மன​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்கின்றன. இக்கூட்​டத்​தில் ரிதப்​ரதா பானர்​ஜி, சந்​திபன் சஹா மற்றும் கொல்கத்​தா​வின் முன்​னாள் மேயர் ஃபிர்​ஹாத் ஹக்​கீம் உள்​ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

இக்​கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட தீர்​மானத்​தின்​படி, கட்​சி​யின் தலைவர் பதவியிலிருந்து மம்தா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவ​ராக அருப் ராய் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இக்​குழு​வில் உள்ள மற்ற தலைவர்​களுக்கும் முக்​கியப் பொறுப்பு​கள் வழங்கப்பட்​டுள்​ளன.

Related Post

தமிழ்நாடு ஆளுநர், இலச்சினை.. திருவள்ளுவர் ஆண்டு.. ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

Posted by - January 23, 2023 0
வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில்,…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

Posted by - December 30, 2023 0
சென்னை: முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

Posted by - January 16, 2025 0
இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி! திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *