செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

255 0

தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதனமை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 33வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Post

covai

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - November 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்! கேப்டனின் உடலில் என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

Posted by - November 30, 2023 0
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்துக்கு என்னென்ன உடல்நிலை பிரச்சினைகள் என்பது குறித்து நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம். தொண்டர்கள், ரசிகர்களால் கேப்டன் என அன்போடு…

அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Posted by - June 14, 2024 0
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள,  பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும்…

நீண்ட உறக்கத்திலிருந்து முதல்வர் எப்போது விழிப்பார்..? – அண்ணாமலை விமர்சனம்..!!

Posted by - May 25, 2024 0
நீண்ட உறக்கத்திலிருந்து தமிழக முதல்வர் எப்போது விழிப்பார் ? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் மீண்டும் பிறழ்சாட்சி சொன்ன சுவாதி.. கடைசி வாய்ப்பு கொடுத்த நீதிபதி

Posted by - November 26, 2022 0
மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *