schoolbooks

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத் திட்ட வடிவமைப்புக் குழு: தமிழக அரசு உத்தரவு

89 0

சென்னை: இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை தலை​மை​யில் புதிய பாடத் திட்ட வடிவ​மைப்​புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான பாடத் திட்​டம் படிப்​படி​யாக மாற்​றியமைக்​கப்பட உள்​ளது. கடந்த திமுக ஆட்​சி​யில் இஸ்ரோ தலை​வர் நாராயணன், கிரிக்​கெட் வீரர் அஸ்​வின், விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன் உள்​ளிட்​டோர் அடங்​கிய புதிய பாடத் திட்ட வடிவ​மைப்பு உயர்​நிலைக் குழு, வல்​லுநர் குழு அமைக்​கப்​பட்​டது.

அந்த குழு, மேற்​கொள்ள வேண்​டிய மாற்​றங்​களை ஆய்வு செய்​தது. ஆசிரியர்​கள், பெற்​றோர், கல்​வி​யாளர்​கள், மாணவர்​கள் உட்பட பல்​வேறு தரப்​பினரின் கருத்​துகளை​யும் பெற்​றது. அதன் அடிப்​படை​யில், பள்​ளிக்​கல்வி மேம்​பாட்​டுக்​கான பரிந்​துரைகள் மற்​றும் புதிய பாடத் திட்​டத்​துக்​கான அறிக்​கையை தயாரித்து அரசிடம் வழங்​கியது. அதைத் தொடர்ந்​து, முதல்​கட்​ட​மாக நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு முதல்​வர் விஜய் தலை​மை​யில் தவெக அரசு பொறுப்​பேற்​றுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை தலை​மை​யில் புதிய பாடத் திட்ட வடிவ​மைப்​புக் குழுவை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறைச் செயலர் சந்​திரமோகன் வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யுள்​ள​தாவது: பள்ளி பாடத் திட்​டத்தை மேம்​படுத்​தும் வகை​யில் புதிய பாடத் திட்ட வடிவ​மைப்​புக் குழுவை அரசு அமைத்​துள்​ளது. இதன் தலை​வ​ராக இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை செயல்​படு​வார். விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன், சென்னை பல்​கலைக்​கழக இயற்​பியல் துறை பேராசிரியை ரீட்டா ஜான், சென்னை மாநிலக் கல்​லூரி முன்​னாள் பேராசிரியர் சுதந்​திர​முத்து உள்​ளிட்ட 14 பேர் உறுப்​பின​ராக இருப்​பார்​கள். மாநிலக் கல்வி ஆராய்ச்​சி, பயிற்சி நிறுவன இயக்​குநர் இக்​குழு​வின் உறுப்​பினர் – செயல​ராக செயல்​படு​வார். உறுப்​பினர்​களின் பதவிக் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

தற்​போது 1 முதல் 3-ம் வகுப்பு வரை புதிய பாடத் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் புதிய குழு, 4-ம் வகுப்பு முதல் புதிய பாடத் திட்​டத்தை தயாரித்து அரசிடம் சமர்ப்​பிக்​கும். குழு​வின் பரிந்​துரைகள் அடிப்​படை​யில் 4-ம் வகுப்பு முதல்​ பிளஸ்​ 2 வரை படிப்​படி​யாக புதி​ய பாடத்​திட்​டம்​ பின்​பற்​றப்​படும்​.

Related Post

ஆவின் பால் பாக்கெட் கலர் வித்தியாசம்.. இவ்வளவு விஷயம் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

Posted by - April 5, 2023 0
#Aavin Milk : ஆவின் பால்பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கும். பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கேட்டு வாங்கினாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும்…

கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

Posted by - December 11, 2023 0
சென்னை: கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா? சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி…

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - January 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - March 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *