jactojio png

அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வலியுறுத்தி மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் ஜாக்டோ-ஜியோ

56 0

சென்னை: அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்​பதை வலி​யுறுத்​தி, மீண்​டும் போராட்டக் களத்​துக்கு தயா​ராவ​தாக, ஜாக்டோ ஜியோ அமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் கு.வெங்​கடேசன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 2003 ஏப். 1-ம் தேதிக்குப் பிறகு பணி​யில் சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​களுக்கு ஓய்​வூ​தி​ய​மும், ஓய்​வூ​திய காலப் பலன்​களும் அறவே மறுக்​கப்​பட்​டுள்​ளது. பணி​யாளர் பகுப்​பாய்வுக் குழு என்ற ஒன்று அமைக்​கப்​பட்டு பணி​யிடங்​களை தனி​யார் வசம் ஒப்​படைக்​கும் நடவடிக்கை என்​பது, முன்பு எவ்​வாறு வேலைநியமன தடைச் சட்​டம் மூலம் அமல்​படுத்​தப்​பட்​டதோ, அதே​போல், வேறு வடி​வில் அரசு பணி​யில் எதிர்​காலத்​தில் வேலை​வாய்ப்பை முற்​றி​லு​மாக பறிக்​கக்​கூடிய நிலையை உரு​வாக்​கக் கூடிய திசை வழியை நோக்கி அரசு நிர்​வாகம் சென்று கொண்​டிருக்​கிறது.

தமிழகத்​தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிப​தி​கள், மாவட்ட நீதிப​தி​கள் ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்ட ஊதிய மாற்ற நிலுவை தொகை, நிதி ஆதா​ரம் இல்லை என்ற காரணத்​தால், ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​களுக்கு மறுக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், ஏறக்​குறைய 2003 போன்ற ஒரு சூழல்​தான் தற்​போதும் உள்​ளது. நமது உரிமை​களை ஒன்​று​ பட்டு கேட்க தவறி​னால், என்​றுமே அவற்றை பெற முடி​யாது.

பழைய ஓய்​வூ​தி​யத்தை மீண்​டும் அனை​வரும் பெற வேண்​டு​மா​னால், ஒன்​று​பட்ட சக்​தி​யாக களத்​தில் நிற்க வேண்​டும். 2003 ஏப்​.1-ம் தேதிக்கு பிறகு பணி​யில் சேர்ந்த நம் இளை​யோ​ருக்கு ஓய்​வூ​தி​யத்தை உத்​திர​வாதப்​படுத்த கூடிய ஒரு ஜனநாயக அறவழி போராட்ட களத்​தில் இளைய தலை​முறையோடு இணைந்து மீண்​டும் களம் காண்​போம். அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்ற புதிய சகாப்​தத்தை படைக்கத் தயா​ராவோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

Generated Image November 22 2025 5 51PM

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

Posted by - June 28, 2025 0
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான…
Generated Image November 22 2025 5 37PM

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சொன்ன யோசனை

Posted by - January 3, 2023 0
பொங்கல் பண்டிகை | ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பொங்கல்…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - September 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *