Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

234 0

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது சாதி ரீதியிலான முத்திரை குத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய திறமையாலும், தான் பார்த்த, தன்னை பாதித்த சமூக நிகழ்வுகளையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இவரது படம் வெளியாகும் போதெல்லாம் அதில் பேசப்படும் கதைக்களம், காட்சிகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகும்.

இயக்குநர் மோகன் ஜி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரையலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது சாதி ரீதியிலான முத்திரை குத்தப்பட்டாலும் தொடர்ச்சியாக சினிமாவில் தன்னுடைய திறமையாலும், தான் பார்த்த சமூக நிகழ்வுகளையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வருகிறார். இதனிடையே மோகன் ஜி ஒரு பேட்டியில், “நாம் பெரிதாக நினைக்கும் ஒரு கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலந்திருப்பதாக செவி வழி செய்திகளை கேட்டிருக்கிறேன். ஆனால் இது தொடர்பான செய்திகளை வெளியிடாமல் தடுத்து உடனடியாக அந்த பிரச்சினையை சரி செய்து வேறு மாதிரி வழக்காக பதிவு செய்து அதனை மறைத்து விட்டார்கள்” என தெரிவித்திருந்தார்.

பழனியில் தரம் இல்லாத பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை வைத்து பேசிய மோகன் ஜி. “அந்த தரம் இல்லாத விஷயம் என்னவென்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்தார்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “எனக்கு அங்கு வேலை செய்பவர்கள் தெரிந்தவர்கள் சொன்ன விஷயம் என்னவென்றால் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதாக கூறினார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லா இடத்திலும் நடக்கிறது என தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து இன்று காலை இயக்குநர் மோகன்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.இப்படியான நிலையில் பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப்பதிவில், “இயக்குனர் மோகன் கைது தொடர்பாக அண்ணன் வழக்கறிஞர் பாலு அவர்கள் தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்

எழுந்த சர்ச்சை.. அளித்த விளக்கம்

முன்னதாக உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டதாக ஆந்திர மாநில அரசு திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியது. லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் தான் இந்த கலப்படம் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்யும் திண்டுக்கலைச் சேர்ந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது.

இப்படியான நிலையில் திருப்பதியில் லட்டு விஷயத்தில் எழுந்த பிரச்னை தீர உடனடியாக யாகம் வளர்க்கப்பட்டு கோயில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் எனவும் தேவஸ்தானம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், திருப்பதியில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் இது போன்ற விஷயம் நடைபெற்று இருப்பதாக தகவல் பரவியது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் நெய் திண்டுக்கலைச் சேர்ந்த ஆவின் நிறுவனம் தான் வழங்குகிறது. திருப்பதிக்கு நெய் வழங்கும் நிறுவனம் வழங்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்தார். மேலும் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவதூறு செய்தி பரப்பியவர்கள் மீதும், இனிமேல் பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து இந்த தகவலுக்கு விளக்கம் அளித்த தமிழக அரசு பழனி பஞ்சாமிர்தத்தில் அப்படி எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

Posted by - February 7, 2024 0
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரையை கேட்டேன்… ரசித்தேன்… சிரித்தேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று…

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

உருவாகிறது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Posted by - November 27, 2023 0
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.…

தமிழ்நாடு-புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது: 9.76 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் ….

Posted by - April 6, 2023 0
தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற…

ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன – தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

Posted by - February 16, 2023 0
தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *