vijayabaskar

தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி

75 0

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு ஊழலுக்கு எதிராக பேச யோக்கியதை இருக்கிறதா? என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் சி விஜயபாஸ்கர் இருவரும் இன்று தவெக-வில் இணைந்தனர். இவர்கள் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த காலத்தில் இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

ஊழலுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்டதாக விஜய் கூறும் தவெக-வில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இரு விஜயபாஸ்கரையும் கட்சியில் விஜய் சேர்த்திருப்பது மிகப்பெரிய எதிர்ப்பை விஜய்க்கு உண்டாக்கியுள்ளது.

இதுதொடர்பாக, திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

போலிப் பத்திரம் தயாரித்தவர்:

கரூர் எம்.ஆர். விஜ­ய­பாஸ்­கர், போலிப் பத்­தி­ரம் தயா­ரித்து போலீசுக்கு பயந்து தலை­ம­றை­வாக இருந்­த­வர். வேறு ஒரு­வ­ருக்­குச் சொந்­த­மான ரூ.100 கோடி மதிப்­பி­லான நிலத்­துக்கு போலிப் பத்­தி­ரம் தயா­ரித்­த­தாக குற்­றம் சாட்டப்பட்டவர்.

இது தொடர்­பாக குற்­றச்­சாட்டு பதி­வா­ன­தும் கரூர் நீதி­மன்­றத்­தில் முன் ஜாமீன் கேட்­டார் அவர். நீதி­மன்­றம் ­தள்ளுபடி செய்­தது. உடனே தலை­ம­றைவு ஆனார். கேர­ளா­வில் பதுங்கி இருந்த அவரை தமிழ்­நாடு சி.பி.சி.ஐ.டி. போலீ­ஸார் கைது செய்து இழுத்து வந்­தார்­கள். திருச்சி சிறை­யில் அடைக்­கப்­பட்டார். இது தொடர்­பாக வரு­மான வரித்து­றை­யும் தனி­யாக ஒரு வழக்கை பதிவு செய்­துள்­ளது.

துர்நாற்ற சக்தி:

இதெல்­லாம் அவர் அர­சி­ய­லுக்கு நுழைந்த காலத்­தில், அமைச்­சர் ஆவ­தற்கு முன்பு நடந்­தது அல்ல. அமைச்­ச­ராக இருந்த பிறகு நடந்தவை ஆகும். 2024 ஜூலை மாதத்­தில் நடந்­தவை ஆகும். இந்த யோக்­கிய சிகா­ம­ணி­யை­யும் இணைத்­துக் கொள்ள இருக்­கி­றார் துர்­நாற்ற சக்தி விஜய்.

குட்கா விஜயபாஸ்கர்:

விரா­லி­மலை விஜ­ய­பாஸ்­க­ருக்கு ‘குட்கா விஜ­ய­பாஸ்­கர்’ என்­று­தான் பெயர். சென்­னை­யில் சட்­ட­வி­ரோ­த­மா­கத் தடை செய்­யப்­பட்ட குட்கா பொருட்­களை விற்­பனை செய்ய அ.தி.மு.க. முன்­னாள் அமைச்­சர்­கள், ஐ.பி.எஸ். அதி­கா­ரி­கள், வணிக வரித்­துறை அதிகா­ரி­கள் மற்­றும் சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்­சம் தரப்­பட்­ட­தாக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்­சி­யில் குற்றச்­சாட்டு எழுந்­தது.

குட்கா வியா­பா­ரி­க­ளி­டம் வரு­மான வரித்­துறை விசா­ரணை நடத்துகி­றது. அப்­போது தங்­க­ளது வியா­பா­ரத்­துக்கு துணை நின்ற­வர்­கள் அ.தி.மு.க. ஆட்­சி­யில் யார் யார் என்­பதை டைரி எழுதி வைத்­தி­ருந்­தார்­கள் வியா­பா­ரி­கள்.

இது தொடர்­பான வழக்­கில் மத்­திய கலால் வரித்­துறை தாக்­கல் செய்த பதி­லில், ‘’டெல்­லி­யில் இருந்து ஏரா­ள­மான
தமிழ்நாட்டிற்கு குட்கா பொருள்­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதை விற்­ப­தற்­காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறை­யில் பணப்­ப­ரி­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது” என்று கூறப்­பட்டு இருந்­தது. வரு­மான வரித்து­றை­யும் இதனை வலி­மைப்­ப­டுத்­து­வது மாதி­ரி­யான ஆதாரங்களை கொடுத்துள்ளது.

தலைமை நீதி­பதி இந்­திரா பானர்ஜி, அப்­துல் குத்­தூஸ் அமர்வு, சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டது. ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்­றது தொடர்­பாக வரு­மான வரித்­துறை அ.தி.மு.க. ஆட்­சி­யில் தலை­மைச் செய­லா­ள­ருக்கு ஒரு கடி­தம் அனுப்­பி­யது.

லஞ்சம் பெற்ற ஆதாரம்:

அதில் அ.தி.மு.க. ஆட்­சிக் காலத்து அமைச்­ச­ரான விஜ­ய­பாஸ்­கர், இரு டி.ஜி.பி.க்கள் பெயர்­கள் இருந்­தன. விஜ­ய­பாஸ்­கர் லஞ்­சம் பெற்­ற­தற்­கான ஆதா­ரங்­கள் கொண்ட ஒரு கோப்பு ஒன்றை வருமான வரித்­துறை அனுப்பி இருந்­தது. அவ­ரைத் தான் எம்.எல்.ஏ. பதவி விலக வைத்து த.வெ.க.வில் இணைத்­துக் கொள்­கிறார் துர்­நாற்ற சக்தி விஜய்.

யோக்கியதை இருக்கிறதா?

டாக்­டர் விஜ­ய­பாஸ்­கர் மீது வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்­த­தாக புதுக்­கோட்டை நீதி­மன்­றத்­தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை­யி­னர் குற்­றப்­பத்­தி­ரிக்கை தாக்­கல் செய்­துள்­ளார்­கள். (2023 மே. 22) வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இவ­ரைத் தான் சேர்த்­துக் கொள்­கி­றார் துர்­நாற்ற சக்தி விஜய். முத­ல­மைச்­சர் விஜய்க்கு ஊழ­லைப் பற்றி பேசுவதற்கு யோக்­கி­யதை இருக்­கி­றதா?

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Related Post

Generated Image November 04 2025 4 22PM

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

“ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு” கொதிக்கும் உதயநிதி!

Posted by - March 3, 2025 0
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை,…
Gemini Generated Image r7rbbvr7rbbvr7rb

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…
e

வரலாறு காணாத வாக்குப்பதிவு! 5 மணி நிலவரப்படி 82.24% – ஆட்சி மாற்றத்தின் அறிகுறியா?

Posted by - April 23, 2026 0
தமிழகத்தில் இந்த முறை தேர்தலில் வாக்குப்பதிவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *