PhonePe, அமேசான் பே இருக்கா.. அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!

239 0

இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை இந்த யுபிஐ (upi) செயலிகளை பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக இந்த செயலிகள் மூலம் சில வினாடிகளில் பணம் அனுப்ப முடிகிறது. ஆனாலும் யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.அதாவது இப்போது யுபிஐ செயலியைப் பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். இது குறித்து விரிவான தகவல்களை பார்க்கலாம். சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், போன் பே, ஜி பே (கூகுள் பே) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனை அதிகளவில் நிகழ்வதாகச் சமீபத்தில் அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.குறிப்பாக போன்பே வழியாக, பொதுமக்களுக்கே தெரியாமல், அவர்களது வங்கி கணக்கில் இருந்து அதிகளவிலான பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பெறப்பட்ட அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் அமேசான் பே-க்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இதில் பிஎம் கிசான் யோஜனா என்ற மோசடி செயலியும் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த மோசடி செயலி ஆனது வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது. இது பயனாளிகளின் எஸ்எம்எஸ் பயன்பாட்டையும், செல்போன் உள்ளிட்ட சாதனங்களின் இயக்கங்களையும் கட்டுப்படுத்தி அதில் இருக்கும் தரவுகளைச் சேகரித்து, யுபிஐ செயலிகள் மூலம் மோசடி பரிவத்தனைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த நவம்பர் மாதம் மட்டும் தமிழகத்தில் இதுபோன்ற 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒருவேளை இதுபோன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் உங்கள் போனுக்கு வரும் மெசேஜ் மூலம் வரும் தெரியாத இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தேவையில்லாத செய்திகள் அல்லது மெயில்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக யுபிஐ (UPI) தரவுகளை அல்லது OTP-யை பகிர்வதைத் தவிர்க்கவும்.அதேபோல் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் அதிகாரப்பூர்வ ஆப்களை மட்டுமே டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்துத் தெரிந்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.

குறிப்பாக யுபிஐ செயலிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மோசடி செய்பவர்கள், மெசேஜ், போன் கால் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மெசேஜ் மூலம் அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் நம்பும் விதமாக எதாவது ஒரு கதையை சொல்லி, அவர்களுடைய வங்கி கணக்கில் (bank account) இருக்கும் பணத்தை எளிதாக திருடிவிடுகிறார்கள். இது போன்ற சம்பவம் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

Related Post

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது

Posted by - June 5, 2023 0
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது…

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம்

Posted by - April 4, 2023 0
புதுடெல்லி : ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு,…

இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!”

Posted by - February 25, 2026 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார். “நல்லகண்ணு உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - August 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *