Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

342 0

தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு காரணமாக இருந்தாலும், உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் பட்டாளமும் வியூஸ்களுக்கு காரணமாகிவிடுகிறது. ஏனென்றால், இதே ஆண்டில் சில ரிபீட் மோட் பாடல்களான ‘மாமன்னன்’ படத்தில் வரும் ‘ராசாகண்ணு’, ‘நெஞ்சமே நெஞ்சமே’, ‘சித்தா’ படத்தில் ‘கண்கள் ஏதோ’ பாடல்கள் வெளிவந்த போதிலும் வியூஸ் கணக்கில் குறைவாகவே உள்ளன. விஜய்யின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், அவர் பாடிய இரண்டு பாடல்கள் டாப் 10-ல் இடம்பெற்றுள்ளன.

காவாலா (லிரிக்கல்): நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ லிரிக்கல் வீடியோ பாடல் 22 கோடி (228 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜின் வரிகளில் உருவான இப்பாடலை ஷில்பா ராவுடன் இணைந்து அனிருத் பாடியுள்ளார்.

நான் ரெடி (லிரிக்கல்): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘நான் ரெடி தான் வரவா’ லிரிக்கல் பாடல் 20 கோடி (202 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இப்பாடலை விஜய்யும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர்.

 

 

ரஞ்சிதமே: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே வீடியோ பாடல் 14.9 கோடி (149 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. தமன் இசையைத்துள்ள இப்பாடலை விஜய், மானசியுடன் இணைந்து பாடியுள்ளார். விவேக் பாடலை எழுதியுள்ளார்.

 

 

காவாலா (வீடியோ): ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ வீடியோ பாடல் (video song) 14 கோடி (140 மில்லியன்) பார்வைகளைக் கடந்து 4-வது இடத்தை பிடித்துள்ளது.

வா வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா வாத்தி’ பாடல் 13 கோடி (135 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். தனுஷ் இப்பாடலை எழுதியுள்ளார்.

 

 

ஹூக்கும் (லிரிக்கல்): ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹூக்கும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ 11 கோடி (111 மில்லியன்) பார்வைகள கடந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை அவரே பாடியுள்ளார். சூப்பர் சுப்பு வரிகளை எழுதியுள்ளார்.

ஜிமிக்கி பொண்ணு: வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல் வீடியோ 9 கோடி (94 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

காட்டுமல்லி: இளையராஜா இசையில் உருவான ‘விடுதலை பாகம் 1’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘காட்டுமல்லி’ பாடலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அனன்யா பட் மற்றும் இளையராஜா பாடியுள்ள இப்பாடலை இளையராஜாவே எழுதியுள்ளார். இதுவரை இப்பாடலின் வீடியோ 7.2 கோடி (72 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது.

படாஸ்(லிரிக்கல்): லியோ படத்தில் இடம் பெற்ற ‘படாஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ 6.4 கோடி (64 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. அனிருத்தே பாடி இசையமைத்துள்ள இப்பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு: ‘வாரிசு’ படத்தில் வெறும் தமனின் இசையமைப்பில் உருவான இப்பாடலின் வீடியோ 4.1 கோடி (41 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது.

 

Related Post

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

அஜித்தின் நச் லுக்.. மஞ்சு வாரியர் குரல்.. துணிவு பட ’காசேதான் கடவுளடா’ பாடல் க்ளிக்ஸ்!

Posted by - December 18, 2022 0
Kasethan Kadavulada : அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து 2ஆவது பாடலாக காசேதான் கடவுளடா பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1/ 7 துணிவு படத்தின் காசேதான் கடவுளடா லிரிக்கல்…

வெள்ளிக்கிழமை எந்த சாமியைக் கும்பிடணும்? செல்வம், அமைதி, குடும்ப வளர்ச்சிக்கான முக்கிய வழிபாடுகள் 2025ல் வைரல்!

Posted by - December 12, 2025 0
2025ல் ஆன்மீக ஆர்வம் அதிகரிச்சதோட, “வெள்ளிக்கிழமை எதை கும்பிடணும்? எது செல்வத்துக்கு நல்லது?”ன்னு Google-ல search பண்ணுறவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால Friday devotional updates இப்போ…

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

தஞ்சையில் மோதல்: பேருந்தை மற்றொரு பேருந்தின் மீது மோதியதால் பரபரப்பு..

Posted by - November 21, 2022 0
இரண்டு பேருந்திற்க்கும் இடையே யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு பேருந்துகளை இயக்குவதில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பேருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *