பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில் குடிங்க.. அப்புறம் பாருங்க

273 0

சென்னை:

வெண் பூசணி சாறை காலை வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ஜூஸை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?

நீர் சத்து இருக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பார்கள், அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் இந்த நீர் சத்துள்ள பதார்த்தங்களையும் பழங்களையும் எடுத்துக் கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.இந்த நீர் சத்து காய்கறிகளான வெண் பூசணிக்காய், சுரக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சௌ சௌ, வெள்ளரிகாய் உள்ளிட்ட காய்களில் வெள்ளரியை தவிர்த்து மற்ற காய்களை சில வீடுகளில் சமைப்பது கூட இல்லை.பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில்  குடிங்க.. அப்புறம் பாருங்க | Do you know the health benefits of Ash Gourd  Juice? - Tamil Oneindia

அப்படியிருக்கும் போது எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்? ஆனால் எந்த காய்கறிகளையும் தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள், மூதாதையர்களின் அறிவுரையாக இருக்கிறது. அந்த வகையில் வெண் பூசணிக்காய் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது. சிறுநீர்ப்பையின் செயல்பாடுகளை ஊக்குவித்தது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இருமல், சளி போன்றவைகளுக்கும் இது அருமருந்தாகிறது. வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை சரி செய்கிறது. இந்த பூசணிக்காய் பார்ப்பதற்குத்தான் மிகவும் பெரிதாக இருக்கும்.

ஆனால் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் நீர்ச்சத்து அதிகம். இதனால் இது எடை குறைப்பில் அதிக பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றும். நீர் சத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் சூட்டை தணிக்கும். வயிற்றுக்கு இதமானது. அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்கள் ஏற்படாமல் தடுக்கும். பூசணிக்காயில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. மேலும் தியாமின், ரிபோஃபிளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த பூசணிக்காய் உடல் சோர்வை போக்கும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும்.

கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலை சுத்தமாக வைத்திருக்கிறது. இந்த பூசணிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையை நீக்கும். மனம் பதற்றம் போன்ற பிரச்சினைகளை குறைத்து மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதலையும் குறைக்கும்.

இதற்காக ஒரு ஜூஸ் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வெள்ளை பூசணி- தோல் நீக்கியது

இஞ்சி- ஒரு சிறிய துண்டு

பூண்டு- 5 பல் உரித்தது

உப்பு – சிறிதளவு

எலுமிச்சை பழச்சாறு- சிறிதளவு

புதினா இலைகள்- 10

இவற்றை எல்லாம் சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்தும் எலுமிச்சை சாறும் கரைத்து அந்த ஜூஸை குடித்து வர வேண்டும்.

Related Post

”தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்! சாதி வாரி எப்போ நடத்த போறீங்க..” அன்புமணி வார்னிங்

Posted by - February 11, 2025 0
“69 %இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்றால் முதலில் சென்னையில்…

நீட்- ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

Posted by - March 15, 2023 0
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார். 2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு…

திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை

Posted by - February 28, 2023 0
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

இபிஎஸ்-க்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்..!

Posted by - March 30, 2023 0
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று அஜித்திடம் இரங்கல் தெரிவித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைப்பேசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *