Sun Tan-ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்..

317 0

உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம்.

Sun Tan-ஐ நீக்கி மிருதுவான, பிரகாசமான சருமத்தை பெறுவதற்கான சில எளிய டிப்ஸ்கள் கீழே.சாஃப்டான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால் வேலை நிமித்தமாக அடிக்கடி வெயிலில் அலைவது உள்ளிட்ட சில நம் வெளிப்புற வாழ்க்கை முறையால் பிக்மென்டட் சருமத்தை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.அதிக நேரம் வெயிலில் இருப்பதால் சிலருக்கு சருமம் அதன் இயல்பான கலரில் இருந்து கருமையாகி விடும். இது சன்டேன் (Sun Tan) என குறிப்பிடப்படுகிறது.

மிகவும் சென்சிடிவ்வான ஸ்கின் கொண்டவர்கள் வெயிலில் சில நிமிடங்கள் சென்றாலே சருமம் கருத்து விடும். உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம்.

Sun Tan-ஐ நீக்கி மிருதுவான, பிரகாசமான சருமத்தை பெறுவதற்கான சில எளிய டிப்ஸ்கள் கீழே.

லெமன் ஜூஸ் மற்றும் தேன் : எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும், இது Sun Tan-ஐ அகற்ற உதவுகிறது. நீங்கள் ஃப்ரெஷ் லெமன் ஜூஸை எடுத்து கொண்டு அதில் 1 டேபிள்ஸ்பூன் தேனை சேர்க்கவும். இந்த கலவையோடு நீங்கள் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உங்கள் சருமத்தில் மெதுவாக தேய்க்கலாம், இதனால் இறந்த செல்கள் சருமத்திலிருந்து வெளியேறும். சுமார் 25 நிமிடங்கள் கழித்து இந்த பேக்கை கழுவி விடலாம்.

கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர்: சருமத்தின் நிறத்தை ஒளிர செய்வதில் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் சருமத்தை பிரகாசமாக்கும் ஸ்கின்-பிரைட்னிங் ஏஜென்ட்டாக செய்லபடுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தை மிருதுவாக்கும். எனவே இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து மிக்ஸ் செய்து பேஸ்ட்டாக்கி சருமத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யவும். சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் மெதுவாக தேய்த்து வாஷ் செய்து விடுங்கள்.

பப்பாளி, தக்காளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி: பப்பாளியானது எக்ஸ்ஃபோலியேட் பண்புகள் நிறைந்தது மற்றும் நேச்சுரல் என்சைம்களை கொண்டுள்ளது. தவிர சிறந்த நேச்சுரல் ப்ளீச்சிங் ஏஜன்ட்டாகவும் செயல்படுகிறது. உருளைக்கிழங்கு சாறு நல்ல ப்ளீச்சிங் ஏஜன்ட் மட்டுமல்ல, கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நீக்குகிறது. தக்காளி சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. வெள்ளரி ஒரு சென்சேஷ்னல் கூலிங் ஏஜென்ட் மற்றும் வெயிலில் சருமத்தில் ஏற்பட்ட நிறமாற்றத்தை அகற்ற உதவுகிறது.

பழுத்த பப்பாளி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் வெள்ளரி ஆகியவற்றை 4-5 க்யூப்ஸ் எடுத்து, ஜெல்லி போல பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை ஃப்ரிட்ஜில் சுமார் 15 நிமிடங்கள் வைத்து கூலிங்கானவுடன் எடுத்து அந்த பேஸ்ட் சருமத்தில் உறிஞ்சப்படும் வரை தேய்க்கவும்.

பருப்பு, மஞ்சள் மற்றும் பால்: இரவில் மசூர் பருப்பை காய்ச்சாத பச்சை பாலில் ஊற வைக்கவும். ஊறவைத்த பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து,சருமத்தில் தடவி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் நன்கு காயும் வரை காத்திருந்து பின் அதை வாஷ் செய்துவிடுங்கள்.

காபி, தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை: காஃபின் நன்மைகளுடன் காஃபி சருமத்திற்கு பல நன்மைகளை கொண்டுள்ளது. டி-டேனிங் பண்புகளை தவிர காபி முகப்பருக்களை அகற்ற உதவுகிறது. மறுபுறம் தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. காபி பவுடர், தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை உள்ளிட்டவற்றை சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இதனை சருமத்தில் அப்ளை செய்து சுமார் 10 நிமிடம் ஸ்கரப் செய்யவும். பின் 10 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் வாஷ் செய்துவிடுங்கள்.

Related Post

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

Posted by - April 10, 2023 0
பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார். அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான்…

கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.. விஜய் ஆண்டனி மேடையில் உருக்கம்

Posted by - May 28, 2025 0
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து பிரபலம் ஆகி அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர். பிச்சைக்காரன் படம் அவர் கெரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால்…

எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா! கமல் முன்பே சொன்ன வார்த்தை

Posted by - January 8, 2024 0
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே…

பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்

Posted by - November 24, 2023 0
#biggboss7 #vijaytv #bb7tamil #pixeltv #pixelmedia #tamilnews விசித்ரா பிக்பாஸ் 7வது சீசனில் தற்போது பூகம்பம் டாஸ்க் நடந்து வருவது நமக்கு தெரியும். இந்த டாஸ்க் இடையில்…

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

Posted by - March 18, 2023 0
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *