மதுவுக்கு அடிமையானவரா நீங்கள்.? – அதன் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

400 0

தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு உடலில் பல உபாதைகள் ஏற்படும். ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது?

இன்றைய சூழலில் மது அருந்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இளைஞர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு மதுப்பழக்கம் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு நாளடைவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எப்போதாவது குதூகலமாக இருப்பதற்கு என்று மது அருந்தும் பழக்கம் மாறி, மது அருந்தாமல் இன்றைய பொழுதை கடந்து செல்லவே இயலாது என்ற அளவுக்கு சிலர் அதற்கு அடிமையாகவும் இருக்கின்றனர்.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்கள் உண்டாகும். குடும்ப உறவுகள் மத்தியில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு, இதய நோய், மன அழுத்தம், கவலை போன்ற சிக்கல்கள் உண்டாகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நாளடைவில் உயிரிழப்பு ஏற்படும். எனவே ஆரம்பத்திலேயே மது பழக்கதிலிருந்து விடுபடுவது அவசியம்.

ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்பதை எப்படி கண்டறிவது?

மதுவை தேடுவது : 

ஒரு நொடிப் பொழுது கூட மது என்ற சிந்தனையின்றி இவர்களது வாழ்க்கை நகராது. தூங்கி கண் விழித்த பொழுதில் கூட மதுவை தேடி ஓடுபவர்கள் இருக்கின்றனர். இவர்களால் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. சிலர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியாமல் மறைந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

எதிர்மறை விளைவுகள் குறித்து கவலை கிடையாது : 

மது அருந்துவதால் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது இவர்களுக்கு தெரியும். தன்னுடைய உடல் நலனுக்கும் சரி, குடும்பத்திற்கும் சரி, மதுவால் தீமைகள் ஏற்படும் என்று தெரிந்தாலும் அதற்கு இவர்களின் மனம் கவலை கொள்ளாது. மாறாக குடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.

சகிப்பற்றதன்மை மற்றும் முன்னுரிமை :

சராசரியாக மற்ற நபர்கள் அருந்துகின்ற அளவுக்கான மது இவர்களுக்கு போதுமானதாக இருக்காது. இன்னும் நிறைய அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலருக்கு மது அருந்தாவிட்டால் உடல் நடுக்கம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் காட்டிலும் மதுவுடன் பொழுது கழிக்கவே அதிக விருப்பம் கொள்வார்கள். கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் குடித்தே தீர்க்கும் மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.

போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

மதுவை கைவிடுவதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ளலாம். உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறலாம்.
மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்ற பிற நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துதல் மற்றும் ஆர்வம் கொண்டிருத்தல் மூலமாக மதுவுக்கான சிந்தனையை மட்டுப்படுத்தலாம்.
போதை மறுவாழ்வு மையங்களில் சேர்ந்து தியானம், யோகா போன்ற பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்தால் பலன் கிடைக்கும்.
மதுவுக்கு எதிரான சிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பழகலாம்.

Related Post

என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

Posted by - October 30, 2023 0
நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.…

அது AI போட்டோ, பரப்பாதீங்க.. நடிகை பிரியங்கா மோகன் கோபமான பதிவு

Posted by - October 11, 2025 0
நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய சினிமாவில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அது AI போட்டோ..…

கார் வாங்கி 6 மாதத்தில் குக் வித் கோமாளி சக்தி விபத்தில் சிக்கி காயம்! அதிர்ச்சி வீடியோ

Posted by - July 21, 2023 0
சக்தி விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக வந்தவர் சக்தி. அவர் தற்போது அந்த ஷோவில் வருவது குறைந்துவிட்டாலும் தற்போது சொந்தமாக youtube சேனல்…

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - March 23, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்து போல்…

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

Posted by - May 28, 2023 0
பிக்பாஸ் பிரபலம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம். கூத்துகட்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *