அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

291 0

சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதையும் இரண்டு ஆண்டுகளுக்கும் கொரோனா வைரஸ் புரட்டிபோட்டது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு 2022-ம் ஆண்டுக்குப் பிறகுதான் குறையத் தொடங்கியது. 2022-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியாவில் முழுவதும் இயல்பு நிலைத் திரும்பியது.

ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்தநிலையில், கடந்த 10 நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்துவருகிறது. இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு 4,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-யைக் கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அளவு அதிகரித்துவருகிறது.இந்தநிலையில், சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவருகிறது. பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Related Post

உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?

Posted by - February 19, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீபநாட்களாக பொதுமக்களுக்கு இருமல்,…
milk

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

Posted by - December 6, 2023 0
சென்னை: ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது.…

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!

Posted by - November 23, 2023 0
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். கேரள மாநிலம் பத்தினம்திட்ட பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.…

தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அறிவிப்புகள்?

Posted by - February 19, 2024 0
2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 2024–25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றுள்ள …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *