tamil news

CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் – வீடியோ வைரல்

62 0

CM Vijay EPS: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தவிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் விஜய் வணக்கம் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

CM Vijay OPS: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எதிரெதிரே அமர்ந்தாலும் மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் சொல்லவில்லை.

விஜய் Vs உதயநிதி – எதிரெதிர் இருக்கை

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, சட்டப்பேரவை இன்று கூடியது. இதில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நபர்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். அப்ப்போது முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் நேரெதிரே அமர்ந்தனர். வழக்கமாக இத்தகைய நிலையில் மரியாதை நிமித்தமாக வணக்கங்களை பரிமாறிக்கொள்வர். ஆனால், விஜய் மற்றும் உதயநிதி இடையே அத்தகைய நிகழ்வுகள் ஏதும் ஏற்படவில்லை. முதலமைச்சர் விஜய் பதவியேற்க இருக்கையில் இருந்து எழுந்து வந்தபோது, உதயநிதி வேறு எங்கோ பார்த்தபடி இருந்தார். அதேநேரம், உதயநிதி பதவியேற்க வந்தபோது முதலமைச்சர் அவரை பார்த்தாலும், எதிர்க்கட்சி தலைவர் விஜய் முகத்தை பார்ப்பதை தவிர்த்தார்.

 

புன்னகைத்துக் கொண்ட விஜய் – ஓபிஎஸ்

ஒட்டுமொத்த சட்டப்பேரவையும் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகவும், இறுக்கமாகவும் இருந்தது. அப்போது திமுக பிரிவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள எழுந்து வந்தார். அப்போது முதலமைச்சர் விஜய் சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவிக்க, ஓபிஎஸ்ஸும் சிரித்தபடி வணக்கம் தெரிவித்தார். இதன் பிறகே அவையில் சற்று இயல்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வந்த பலரும் பரஸ்பரம் சிரித்தபடி வணக்கங்களை பகிர்ந்துகொண்டனர்.

எடப்பாடிக்கு வணக்கம் சொன்ன விஜய்

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி பிரமாணம் செய்துகொள்ள இருக்கையில் இருந்து எழுந்து வந்தபோது, ஒட்டுமொத்த சபைக்கும் வணக்கம் வைத்தார். ஆனால், முதலமைச்சர் விஜயின் முகத்தை நேரடியாக பார்க்காமல் இருந்தார். பதவிப்பிரமாணம் முடிந்து இருக்கைக்கு திரும்பி அமரும்போது, விஜயை பார்த்து வணக்கம் வைத்துள்ளார். உடனடியாக சிரித்தபடி முதலமைச்சர் இருகைகளையும் கூப்பி வணக்கம் கூறினார்.

Related Post

யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

Posted by - January 6, 2025 0
பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில்…

இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?

Posted by - January 3, 2023 0
TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து…

ஆடி கடைசி வெள்ளி… மறந்துடாதீங்க! கண்டிப்பாக இதை செய்யுங்கள்…

Posted by - August 14, 2024 0
ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய நாட்கள் எத்தனை வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் ஏன் தனி சிறப்புகள் உள்ளன. பல கொண்டாட்டங்களுக்கு பிறகு தற்போது ஆடி மாதத்தின் இறுதி…
Generated Image November 13 2025 10 04AM

டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Posted by - November 29, 2025 0
திருச்சி: டிட்வா புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார். இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து…

பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டம் : தமிழகத்தில் எவ்வளவு வீடு கட்டப்பட்டது தெரியுமா?

Posted by - April 12, 2024 0
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *