Tamil Diwali Breaking News Collage

Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!

141 0

Magalir Urimai Thogai: நவம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த திட்டத்தில் இணைய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.

மகளிர் உரிமைத் தொகை

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வவராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.1000யிலிருந்து ரூ.2500 உயர்த்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஜூன் மாதத்தில் ரூ.2500 வரவு வைக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூ.2500 உயர்த்தப்படாமல் ரூ.1000 ஜூன் முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை

இந்நிலையில் நவம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க மகளிர் உரிமை தொகை 15ம் தேதி இல்லாமல் முன்கூட்டியே வரவு வைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசு

எனவே முன்கூட்டியே வழங்கினால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதால் தமிழக அரசும் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளை அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மகளிர் உரிமைத் தொகை நவம்பர் மாதம் முதல்வர் வாரத்திலேயே கிடைப்பதால் இல்லத்தரசிகள் குஷியில் இருந்து வருகின்றனர்.

Related Post

Kanimozhi

Kanimozhi: “உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க..” தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!

Posted by - ஆகஸ்ட் 24, 2026 0
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டில் இருந்து தேர்தலில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்று கேட்டு தனக்கு அழைப்பு வந்ததாக ஜோதிடரும், தவெக எம்எல்ஏ-வுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - செப்டம்பர் 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ – கடுமையாக விமர்சித்த முதல்வர்

Posted by - ஜூன் 19, 2025 0
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழடி விவகாரத்தில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடிதத்தின் விவரங்களை காணலாம். திமுக தலைவர் ஸ்டாலின்,…
dddd

CM Vijay: 6 மாதத்தில் தொழில்துறையில் விஜய் ஆட்சி செய்தது என்ன?

Posted by - நவம்பர் 21, 2026 0
முதலீடுகளை ஈர்ப்பதில் புதிய உச்சம் தொடும் தமிழ்நாடு: 1. 112 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2. ரூபாய் 1,14,811.91 கோடி முதலீடுகள் 3. 1 லட்சத்து 32…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - நவம்பர் 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன