அனிருத் முதல் மணிகண்டன் வரை! கலைமாமணி விருதுகள் 2021-2023 யார் யாருக்கு விருதுகள்?

168 0

 கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் ….

2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, யாருக்கு யாருக்கு விருதுகள் கிடைத்துள்ளது என்பதை பார்ப்போம்

கலைமாமணி விருதுகள் :

தமிழக அரசின் கலைமாமணி விருது என்பது, நாட்டியமும், இசையும், நாடகமும், திரைப்படமும் என பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மாநிலத்தின் உயரிய கலை விருதுகளில் ஒன்று.

1968 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது, இன்று வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த கலைஞர்களின் வாழ்க்கையில் பெருமைமிகு அடையாளமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு இசை மற்றும் நாடகக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் திறமைசாலிகளுக்கு வழங்கப்படுகிறது.

மூன்று ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு

அதன் படி கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து வெளியான அறிவிப்பில் 2021,2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படும்

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார். எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும். சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசாசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

பாரதியார் விருது(இயல்) – முனைவர் ந. முருகேச பாண்டியன்

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) – பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்

பாலசரசுவதி விருது (நாட்டியம்) – பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்

யார் யாருக்கு விருதுகள்?

2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்: திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா,  டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள்: திரைத் துறையில் நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர், நிகில் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

Posted by - April 11, 2025 0
திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி…

மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு மிஞ்சிய மருந்து என்றுமில்லை

Posted by - October 16, 2023 0
சென்னை: சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு. நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியைதான்,…

கமலின் இழிவான அரசியல், விஜய் ஒரு பொடிசு.. கடுமையாக சாடிய இயக்குனர்

Posted by - August 29, 2024 0
அரசியல் ஆசை பலருக்கு இருந்தாலும் பெரும்பாலும் நடிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், சீமான் தற்போது விஜய் என சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் களம் காண்கிறார்கள். பெரும்பாலும் நடிகர்கள் மார்க்கெட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *