மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு மிஞ்சிய மருந்து என்றுமில்லை

210 0

சென்னை:

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு.

நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியைதான், சுக்கு என்று சொல்கிறோம்.. இது எளிதில் கெடாத உணவுப்பொருள்.. சமையலுக்கும், மருத்துவத்துக்கும், பயன்படக்கூடியது.

செரிமானம்:

செரிமானத்துக்கு, இஞ்சியை விட சுக்கு மிகவும் நல்லது.. அஜீரண கோளாறு இருப்பவர்கள், சுக்கு + துளசி இலை சேர்த்து மென்று விழுங்கினாலே, அஜீரணம் நீங்கிவிடும்.. வாந்தி, குமட்டலும் நின்றுவிடும். அதனால்தான், மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு சுக்கை அரைத்து தருவார்கள்.. இதனால், குழந்தைகளுக்கு பசியும் நன்றாக எடுக்கும்.மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு  மிஞ்சிய மருந்து என்றுமில்லை | Do you know Amazing Health Benefits in the  Dry Ginger and ...

பித்த வாந்தி இருந்தாலும், சுக்குத்தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். தலைபாரம், தலையில் நீர் கோர்த்திருந்தால், சுக்குடன் பெருங்காய தூளை சேர்த்து தலையில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். காரணம், தலையிலிருக்கும் நீரை, இந்த சுக்கு உறிஞ்சிவிடும்.

கழிவுகள்:

மலச்சிக்கல் இருப்பவர்கள், சுக்குடன், சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டாலே போதும்.. கழிவுகள், நச்சுகள் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும்.. அதேபோல, சுக்குடன் சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள்அழியும். . உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சுக்கு பயன்படுத்தலாம்..

இந்த ஒரு வாணலில், மல்லி விதை, மிளகை வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில், இந்த தூளை சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து, தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால், தேவையற்ற தொப்பை பகுதிகளிலுள்ள கொழுப்புகள் கரைந்து, உடல் எடையை குறையும்.

விஷ ஜூரம்:

இந்த சுக்குப்பொடி, விஷக்கடியையும் விரட்டும், விஷஜூரத்தையும் விரட்டும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை போன்றவற்றை சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தாலே விஷஜூரம் பறந்துவிடும்

அதேபோல, சுக்கு தூள், உப்பு தூள் இரண்டையும் சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் கூச்சம் நீங்குவதுடன், வாய் துர்நாற்றமும் நீங்குமாம். சுக்கை தட்டிப்போட்டு வெந்நீர் வைத்து தலைக்கு குளித்து வந்தால், நீர்க்கோர்வை, தலைவலி வராது..

வெற்றிலை:

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். வாதம், மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கு சுக்கு நல்ல தீர்வினை தருகிறது. சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிட்டால், பசும்பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையும் சேர்த்து குடித்தாலே, சிறுநீரக நோய் தொற்று நீங்கிவிடும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது சுக்கிற்கும் பொருந்தும்..

காரணம், அதிக அளவு சுக்கு பயன்படுத்தினால், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரலாம். அதிலும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று சுக்கு சாப்பிட வேண்டும்.

Related Post

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 19 வயது பெண் போக்சோவில் கைது..! நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Posted by - December 17, 2022 0
சிறுவனின் தந்தை தனது மகனை ஏமாற்றி சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதாக இளம் பெண் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் 17 வயது…

ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted by - February 16, 2023 0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

ஒரு மாதம் டீ குடிப்பதை தவிர்த்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Posted by - March 15, 2024 0
ஒருவேளை உங்கள் டயட்டிலிருந்து டீயை முற்றிலுமாக நீக்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால், நீங்கள் டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *