அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

184 0

2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது.

திருப்புவனம் இளைஞர் அஜித் மீது புகார் அளித்த நிகிதா மீது, 2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித் குமார் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறது. தற்போது இந்த வழக்கானது சிபிஐ விசாரணக்காக மாற்றப்பட்டுள்ளது.

மோசடி வழக்கு

இந்நிலையில், அஜித் மீது வாய்மொழியாக திருட்டு புகார் அளித்த நிகிதா தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக, நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு பதிவாகி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரபலமான இந்த வழக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் அளித்த புகாரின் பேரில், நிகிதா, அவரது தாயார் சிவகாமி, தந்தை மற்றும் பிறர் என ஆறு பேருக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புகாரில் இருந்தது என்ன?

திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் அளித்துள்ள இந்த புகாரில் நிகிதாவும் அவருடைய தாயார் சிவகாமி, தந்தை உட்பட ஆறு பேர் மீது மோசடிப்புகார் பதிவாகியுள்ளது.

அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அப்போதையை துணை முதலமைச்சரின் பிஏ-வை தனக்கு தெரியும். அவர் மூலம் எங்களது சொந்தக்காரர்களுக்கு வேலை வாங்கி  தருவதாகவும் அந்த வகையில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ஓன்பது லட்சமும்,  விஏஒ பணி வாங்கி தருவதாக ஏழு லட்சமும் கொடுத்தோம்.  இப்படி பதினாறு லட்சம் வரை கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை எதுவும் வாங்கித்தராமல் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வந்தனர். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. பின்னர் பணத்தை திருப்பு தர முடியாது என்று கூறி எங்கள் மிரட்டினார்கள் என்றும் அந்த எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அஜித் வழக்கில் புகார் உண்மையா?

தற்போது, திருப்புவனம் வழக்கில் நிகிதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்தை அழைத்து சென்றது சரியா? என சந்தேகம் உருவாகியுள்ளது. ஏற்கனவே பண மோசடி வழக்கில் இருந்து தப்பித்த நபர் மீது அளிக்கப்பட்ட புகாரின் நம்பகத்தன்மை குறித்தும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் தரப்பில் இன்னும் எந்த ஒரு விளக்கமும் வெளியிடப்படவில்லை. எனினும், திருப்புவனம் சம்பவம் மேலும்  திருப்பங்களை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Post

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பிப்.2-ம் தேதி வரை கனமழை… உடனடியாக கரைக்கு திரும்புங்கள்… வானிலை மையம் அலெர்

Posted by - February 1, 2023 0
#News | #NewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN…

ரெட் ஜெயின்ட் மூவிஸ் படங்களில் ‘உதயநிதி வழங்கும்’ என்ற வாசகத்தை நீக்க அறிவுறுத்தல்!

Posted by - December 19, 2022 0
தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன் மூவிஸ் என்பது மட்டும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்

Posted by - March 26, 2026 0
தமிழகத்தில் வருகிற மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023 0
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.…

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்

Posted by - April 24, 2024 0
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *