அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

277 0

தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.

மேலும் சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் – செலவினம் அவர்களின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்

Related Post

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Posted by - August 23, 2023 0
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Posted by - April 26, 2024 0
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!! பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Posted by - May 17, 2023 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *