ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

30 0

TVK Election Manifesto 2026: தவெக முதல் தேர்தல் அறிக்கை நேர்மையின் உத்தரவாதம் என சொல்லலாம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அவசரத்துல அள்ளி விட மாட்டோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

தவெக தேர்தல் அறிக்கை

முன்னதாக பல்வேறு இடங்களிலும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை அளித்திருந்த விஜய், இன்று முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சி சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாயி தொடங்கி மீனவர்கள் வரையிலான பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கும் அவர் தவெக தேர்தல் அறிக்கை பிரதியை வழங்கி சிறப்பித்தார்.

நம்ம தமிழ்நாட்டின் முதல் பெருமை தமிழ் மொழி. அதன் முதல் பெருமை திருக்குறள். அதில் உள்ள பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் நமது அடிப்படையாகும். அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கொண்டு தான் நம்முடைய தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தவெக முதல் தேர்தல் அறிக்கை நேர்மையின் உத்தரவாதம் என சொல்லலாம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி அவசரத்துல அள்ளி விட மாட்டோம். திமுக, பாஜக ஒன்னு தான் சொல்ல அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் பாருங்கள்.

எல்லா பாயிண்டும் ஒரே மாதிரி இருக்கும். என்னவெல்லாம் செய்ய முடியுமோ, எது சாத்தியமோ அதை மட்டும் தான் சொல்லியுள்ளோம். ஆட்சிக்கு வந்த பிறகு சொல்லாததையும் செய்வோம்.

விஜய் அளித்த வாக்குறுதிகள் சில

மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், ஏழை பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் & பட்டுச்சேலை, 1 முதல் 12 வகுப்பு வரை இடைநிற்றலை தவிர்க்க பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன், 100 காமராஜர் தரம் கொண்ட பள்ளிகள், அனைத்து மாவட்டங்களிலும் தரமான கல்வியை வழங்கும் இலவச உறைவிடப்பள்ளி, ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உட்கட்டமைப்பு கல்வி, ஒவ்வொரு தமிழ் மாணவர்களின் கனவுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ.20 லட்சம் பிணையில்லா கடனுக்கான உத்தரவாதம், ஏஐ மூலம் இயங்கும் இலவச போட்டி பயிற்சி, போதைப்பொருள் இல்லாத தமிழகம், பள்ளி & கல்லூரிகள் விழிப்புணர்வு மன்றங்கள், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் வரையிலான உலகளாவிய இன்சூரன்ஸ் திட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கு வருடாந்திர உடல் பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்குதல்” என பல வாக்குறுதிகளை விஜய் அளித்துள்ளார்.

என்னை சந்திப்பது சுலபம் 

தொடர்ந்து பேசிய விஜய், “நான் ஜெயித்தான் என் தொகுதிக்கு நான் தான் பிரதிநிதி. நாம் உறுதியாக ஆட்சிக்கு வருவோம். எந்த மாற்று கருத்தும் இல்லை. தமிழ்நாட்டுக்கு நாம் என்னவாக இருந்தாலும் என்னோட தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ. தான். என் வீட்டுக்கு நான் பிள்ளை தான். அப்படித்தான் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் எப்பவும் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும்.

மாதம் ஒருமுறை கண்டிப்பாக என்னோட தொகுதிக்கு நான் வருவேன். அதுமட்டுமல்லாமல் நீங்களும் என்னை சந்திக்கலாம். அது கஷ்டம் கிடையாது. உங்கள் தேவைகளை நான் கேட்காமலேயே செய்து கொடுப்பேன்” என தெரிவித்தார்.

Related Post

வைகோவை அட்டாக் செய்த மாணிக்கம் தாகூர்.. சிக்கலில் திமுக கூட்டணி!

Posted by - February 20, 2026 0
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் மிக கடுமையாக பேசி வருகிறார். அவரின் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை உண்டாக்குவது போல இருக்கிறது என வைகோ தெரிவித்ததற்கு மாணிக்கம்…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

Posted by - April 7, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில்…

விஜயை மட்டும் விடாமல் அடிக்கும் சீமான்.. அண்ணனுக்கே ஆபத்தா?

Posted by - September 15, 2025 0
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விஜய்யை மட்டும் எல்லை மீறி விமர்சித்து வருவது அவருக்கே பின்னடைவாகும் ஆபத்து உள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *