ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

404 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி லட்சுமி. உள்ளூரில் உள்ள ரவுடிகள் ஸ்ரீனிவாசனிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்டு மிரட்டி வந்தனர். இதனால் விரத்தி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அன்னவரம் போலீஸ் நிலையம் பகுதியில் தனியாக வீடு வாங்கி குடியேறினார்.ஆந்திராவில் தொழிலதிபர், மனைவி வீடு புகுந்து கடத்தல்: ரூ.60 லட்சம் கேட்டு  மிரட்டிய கும்பல் கைது | Tamil News Kidnapping gang arrested in Andhra

இருப்பினும் ரவுடிகள் அடிக்கடி வந்து பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீனிவாசன் வீட்டிற்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தனர். ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவியை காரில் கடத்திச் சென்றனர். மறைவான இடத்தில் அடைத்து வைத்தனர்.

பின்னர் ஸ்ரீனிவாசன் உறவினர்களுக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்தால் கணவன், மனைவி இருவரையும் விடுவிப்போம், போலீசுக்கு சென்றால் அவர்களை கொலை செய்து விடுவதாகவும் போனில் தெரிவித்தனர். ஸ்ரீனிவாசன் உறவினர்கள் ரூ.10 லட்சம் தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தனர். ஆனால் கடத்தல் கும்பல் ரூ.60 லட்சம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிக்க முடியும் என தெரிவித்தனர். இதை அடுத்து ஸ்ரீனிவாசன் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். மேலும் கடத்தல்காரர்கள் ஸ்ரீனிவாசனின் உறவினர்களிடம் பேசிய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது கடத்தல் கும்பல் உள்ளூரிலேயே இருப்பது தெரிய வந்தது. நேற்று மாலை அன்னவரம் கட்டிப்புடி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த கடத்தல் கும்பல் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து தம்பதி மீட்கப்பட்டனர். விஜயவாடாவை சேர்ந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

‘சிபில் ஸ்கோர்’ பிரச்சினையை தீர்க்க… – சு.வெங்கடேசன் எம்.பி முன்வைக்கும் யோசனை

Posted by - June 27, 2025 0
மதுரை: ‘சிபில் ஸ்கோர்’ முறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க, கடன் வாங்குபவர்களின் மதிப்பெண்களை ரிசர்வ் வங்கி தீர்மானிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம்: பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Posted by - September 2, 2023 0
புதுடெல்லி: சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும்…

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Posted by - April 12, 2024 0
புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர்…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *