”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை – திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?

145 0

ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் அறிக்கை:

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “

அனைவருக்கும் வணக்கம்.

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில்  ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

 

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். நன்றி” என தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திபின்போது விஜய் உடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர்.

விஜய் கைப்பட எழுதிய கடிதம்

முன்னதாக விஜய் கைப்பட எழுதி காலையில் வெளியான கடிதத்தில், “

அன்புத் தங்கைகளே!

கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆரளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.

எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணாவாகவும், அரணாகவும்.   எனவே அதை பற்றியும் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்துஙகள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என குறிப்பிட்டு இருந்தார். அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநில அளவில் பேசுபொருளானது. அதுகுறித்து ஆளும் திமுக அரசிடம் வலியுறுத்தினாலும், பெண்கள் பாதுகாப்பிற்கு எந்த பலனும் இல்லை எனும் தொனியில் விஜய் கடிதம் எழுதி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே இன்று ஆளுநரை சந்தித்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Related Post

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு

Posted by - February 18, 2025 0
தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல்…

நாளைமறுநாள் வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - January 8, 2024 0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும்…

ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

Posted by - August 12, 2023 0
புதுச்சேரி: புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த…

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - November 13, 2025 0
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம்…

உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - January 23, 2025 0
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *