ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

270 0

பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் எழுதிய கடிதம்:

இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து போராட்டத்தை இன்று நடத்திய நிலையில், அரசியல் களத்திற்கு புதியதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜய் யாரும் எதிர்பாராத வகையில் இன்று ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநரைச் சந்தித்தது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மாணவிகளுக்கு ஒரு அண்ணனாக தன்னை உருவகப்படுத்தி கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி வெளியிட்டார்.

விஜய் வெளியிட்ட கடிதம் தீயாய் இணையத்தில் பரவி வரும் சூழலில், அவர் எழுதிய கடிதத்தை தவெக தொண்டர்கள் மக்களுக்கு குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை பாரிமுனையில் உள்ள கல்லூரி முன்பு விஜய் எழுதிய கடிதத்தை தவெக மகளிரணியினர் விநியோகித்தனர்.

புஸ்ஸி ஆனந்த் கைது:

அப்போது, அவர்களையும் அவர்கள் உடனிருந்த தவெக ஆண் நிர்வாகிகளையும் காவல்துறையினர் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக கூறி கைது செய்தனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலும்  விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை தவெக-வினர் தி.நகரில் விநியோகித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏராளமான தவெக நிர்வாகிகள் மண்டபத்தின் முன்பு குவிந்தனர். போலீசார் அவர்களையும் கைது செய்து பேருந்தில் ஏற்றி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகளும், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

அடுத்தடுத்து பரபரப்பு:

இன்று மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தக்கோரியும், யார் அந்த சார்? என்ற கோஷங்கள் எழுப்பியும் அ.தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், அரசியல் களத்தில் புதியதாக வருகை தந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரும் தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது காய்களை நகர்த்தத் தொடங்கியிருப்பதால் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் முதல்படியாகவே ஆளுநர் சந்திப்பு, புஸ்ஸி ஆனந்த் கைது அரங்கேறியுள்ளது.

Related Post

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Posted by - May 29, 2023 0
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 8…

சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?

Posted by - March 4, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயார் தயாளு அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். சென்னை விரையும்…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

Posted by - June 17, 2025 0
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *