இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?

335 0

 பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சி நிறைந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. பலரும் படங்களில் காட்டுவது போல கர்ப்பம் தரித்தால் வாந்தி வரும், மயக்கம் வரும் அதுதான் கர்ப்பத்தின் அறிகுறி என்பதெல்லாம் தாண்டி கர்ப்பம் தரித்தலின் ஆரம்ப கட்டத்திலேயே சில அறிகுறிகள் தென்பட துவங்கிவிடும்.

  • #Lifestyle
  • #Pregnancy Parenting Tips
  • #Early #Symptoms Of #Pregnancy In Tamil
இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?
பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் என்றால் அது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் தான். கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யகூடிய நாள் தான். முதலிலேயே அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாதவிடாய் தள்ளிபோனால் தான் அது கருத்தரிப்பை உறுதி செய்யும் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டாலே அதற்கான அறிகுறிகளை வெளிகாண்பிக்க தொடங்கிவிடும். சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம். மருத்துவரிடம் சென்றால் உரிய பரிசோதனை செய்து உறுதி செய்துவிடலாம் என்றாலும் கூட முன்கூட்டியே நீங்களே அறிந்துகொள்ளலாம். அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா?
முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள். இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கருத்தரித்தால் கர்ப்பப்பையின் உள்புறத்தில் நஞ்சுக்கொடி ஹெ.சி.ஜீ என்னும் கர்ப்பகால சுரப்பி சுரக்க தொடங்கும். இந்த சுரப்பிதான் இரத்தத்திலும், சிறுநீரிலும் வெளிப்படும். இதை கொண்டு தான் கருத்தரித்தலை உறுதி செய்கிறோம்.

மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த சுழற்சி வராமல் அதை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அல்லது முந்தைய மாதவிடாய் சுழற்சியிலிருந்து ஏழாம் வாரத்தில் இந்த சுரப்பி அதிகம் சுரக்க தொடங்கும். அப்போது பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்வார்கள் அதனால் தான் மாதவிடாய் காலத்தை சரியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

வாசனை திறன்

வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். பொதுவாக உணவு சமைக்கும் போதும், இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும்.

சில வாசனைகள் உங்களுக்கு பிடித்தாலும் சில வாசனைகள் உங்களை குமட்டலுக்கும் உள்ளாக்கும். ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

சிறுநீர் கழிக்கும் உணர்வு

தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறியே. பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சிறுநீரும் அதிகமாக வெளியேறும்.

கர்ப்பக்காலத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் கருத்தருத்தலை உணர்த்தும் அறிகுறிகளில் இந்த அறிகுறியும் ஒன்று என்பதால் உங்கள் மாதவிடாய் காலத்தை இதனுடன் தொடர்பு படுத்தி இந்த அறிகுறியை கவனியுங்கள்.

சோர்வு

எப்போதுதான் சோர்வு இல்லாமல் இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு உடல் பலவீனத்தை கொண்டிருக்கும். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக சோர்வு ஆட்கொண்டால் அதற்கு காரணம் கருத்தரித்தல் என்று சொல்லலாம்.

உடலில் உண்டாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இந்த சோர்வு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கும். மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது இந்த சோர்வு ஆட்கொண்டால் அதிலும் தொடர்ந்து இருந்தால் கருத்தரித்தலுக்கான அறிகுறிதான் என்று சொல்லலாம்.

வெப்பநிலை

வழக்கத்தை விட உடல் வெப்பநிலை சூடாக இருக்கும். உடலில் உண்டாகும் அசெளகரியத்தால் காய்ச்சல் போன்று நினைக்கலாம். அதற்கேற்ப உடல் ஓய்வு கேட்டு கெஞ்சும்.

இரவு முழுவதும் தூங்கி காலையில் ஓய்வு எடுத்தாலும் கூட காலையில் எழுந்ததும் உங்களை மீண்டும் படுக்கையில் கிடக்க சொல்லும். ஆனால் இவையெல்லாமே காய்ச்சலுக்கான அறிகுறி அல்ல. கருத்தரித்தலுக்கான அறிகுறி தான் என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் உணர்ந்துகொள்வீர்கள்.

குமட்டல்
மார்னிங் சிக்னஸ் என்று சொல்லகூடிய அதிகாலை சோர்வும் குமட்டலும் உண்டாக கூடும். சாப்பிட்டாலும் வயிறு காலியாக இருந்தாலும் இந்த உணர்வு அப்படியே இருக்கும். சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டல் உணர்வை உண்டாக்கும்.

காலை முதல் படுக்கையில் விழுவது வரை நாள் ஒன்றுக்கு கருத்தரித்த ஆரம்ப நாளிலேயே 5 முறையாவது இந்த உணர்வு அதிகரிக்கும். பொதுவான இந்த அறிகுறி அனைவருக்குமே உண்டாவதால் எல்லோருக்குமே இது கருத்தரித்தல் உறுதிக்கான அறிகுறி என்பது தெரியும்.

​பசியும் பசியின்மையும்

நாள் முழுவதும் பசி உணர்வு மிகுந்திருக்கும். அதே நேரம் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர பிற உணவுகள் மீதும் மோகம் அதிகரிக்கும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும்.

இப்படி உணவின் பிடிப்பிலும் ஒரு மாற்றம் உண்டாகும். அதே நேரம் எப்படி சமைத்தாலும் சாப்பிட முடியாது. இந்த அறிகுறிகள் எல்லாமே நீங்கள் கருத்தரித்தலுக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.

​வயிற்றில் அசெளரியம்

வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர்வீர்கள். இது உங்கள் அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். ஏனெனில் கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர்வீர்கள்.

இந்த அறிகுறிகள் கருத்தரித்த அனைவருக்கும் உண்டு. ஆனால் வெகு விரைவிலேயே இந்த அறிகுறிகளை மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும்.

அதை உணர்த்தும் அறிகுறிகளை தான் இங்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த அறிகுறிகள் தீவிரமாகும் வரை பலரும் இந்த அறிகுறிகளை கவனிப்பதில்லை. அதே நேரம் இந்த அறிகுறிகளை அறிந்ததும் நீங்களாக முடிவெடுக்கவும் செய்யாமல் மருத்துவரை அணுகி கருவின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.


Related Post

பிக் பாஸ்க்கு பிறகு புத்தம் புதிதாக வரப்போகும் 4 சீரியல்கள்.. இரண்டு சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க போகும் இயக்குனர்கள்

Posted by - December 30, 2024 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை விட ரியாலிட்டி ஷோ மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீப…

சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்

Posted by - July 18, 2023 0
வனிதா விஜயகுமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். படங்கள் நடித்துவந்த இவர் இடையில் திருமணம்,…

குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - November 11, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற…

தொப்பையை குறைக்க உதவும் வக்ராசனம்

Posted by - February 24, 2023 0
‘வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது. செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். நேராக நிமிர்ந்து வலது காலை…

“தாமரை” மலர் பானம்…சூரியனால் ஏற்படும் தலைவலியை கட்டுபடுத்துகிறது…

Posted by - April 18, 2024 0
இப்போது தாமரை மலர்களின் பலனைப் பெற இதை பயன்படுத்தும் முறை குறித்து  இங்கு காணலாம்.. தண்ணீர் – 1 கிளாஸ் தாமரை மலர்கள் – 3 செய்முறை:…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *