இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

174 0

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க, மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவிற்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தான், தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்

சீனா, பாகிஸ்தானில் ஏராளமான முதலீட்டை செய்துள்ளது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். அதில் முக்கியமான ஒன்று, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். இது வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய முக்கியமான பொருளாதார பாலம். இதன் மொத்த கட்டுமானச் செலவு சுமார் 54 பில்லியன் டாலர்களாகும்.

சிபிஇசி என அழைக்கப்படும் இந்த வழித்தடம், சீனாவின் காசர் நகரையும், பாகிஸ்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும். இந்த பொருளாதார பாதை, பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஒத்துழைப்புப் பகுதிகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்த வழித்தடத்தால், ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்படும் சிபிஇசி

இந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இன்று சீனாவின் பெய்ஜிங்கில் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கேற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெறியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த முத்தரப்பு சந்திப்பின்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

Related Post

2026 எப்படி இருக்கும்? : பகீர் கிளப்பும் கணிப்புகள்!

Posted by - December 31, 2025 0
புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள் பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன…

இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிக நிலநடுக்கங்கள் – சிக்கித் திணறிய துருக்கி

Posted by - February 20, 2023 0
துருக்கியில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக…

விண்வெளியில் கீரை, தக்காளி விளைவித்த சீன வீரர்கள்

Posted by - October 24, 2023 0
பீஜிங்: அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி…

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு

Posted by - February 21, 2023 0
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.…

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

Posted by - November 7, 2023 0
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *