இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

127 0

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன.

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யும்போது, டேட்டாவுடன் கூடிய பிளான்கள் மட்டுமே உள்ளன. டேட்டா தேவைப்படாமல், வாய்ஸ் கால் மட்டும் பேச விரும்பும் சில வாடிக்கையாளர்கள் டேட்டாவிற்கும் சேர்த்தே பணம் கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், டிராய் உத்தரவின் பேரில், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன.

TRAI போட்ட உத்தரவு என்ன.?

கடந்த ஆண்டின் இறுதியில், TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்த வேண்டும், அதையும் ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. டிராயின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது, முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், புதிய பிளான்களை வெளியிட்டுள்ளன.

ஜியோ அறிமுகப்படுத்திய புதிய வாய்ஸ் ஒன்லி பிளான்கள்

ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளானின்படி,

  • 458 ரூபாய் ரீசார்ஜ் – 84 நாட்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்ஸ்-கள் இலவசம். ஜியோ                                             சினிமா மற்றும் ஜியோ டிவி ஆப்-ஐ பயன்படுத்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
  • 1,958 ரூபாய் ரீசார்ஜ் – 365 நாட்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 3,600 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள பிளான்கள்

ஜியோ போலவே, ஏர்டெல் நிறுவனமும் 2 வாய்ஸ் ஒன்லி பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,

  • 509 ரூபாய் ரீசார்ஜ் – 84 நாட்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.
  • 1,999 ரூபாய் ரீசார்ஜ் – 1 வருடத்திற்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.

இந்த இரண்டு நிறுவனங்களின் இரண்டு வாய்ஸ் ஒன்லி பிளான்கள், டேட்டா பயன்படுத்தாமல், வாய்ஸ் கால்களை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

Related Post

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023 0
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர்…

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

Posted by - April 24, 2023 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் நிலைகுலையும் பூமியின் சுழற்சி: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

Posted by - June 20, 2023 0
புதுடெல்லி: மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதன் காரணமாக பூமி 1993 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர்…

புனேயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: கல்லூரி மாணவியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்

Posted by - June 28, 2023 0
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று…

அரியானாவில் குடும்பத்தினர் கண்முன்னே மூன்று பெண்களை கற்பழித்த கும்பல்

Posted by - September 22, 2023 0
அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *