இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️

268 0

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️

மேஷம்✅

பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வந்து உதவி உதவி செய்வதால் சந்தோஷம் அடைவீர்கள். சக தொழிலாளர்களிடமும் நட்பை வளர்த்து சாதகம் பெறுவீர்கள். மாமனார் வீட்டில் இருந்த மனத்தாங்கலை புத்திசாலித்தனத்தால் அகற்றுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்✅

உங்களை வீழ்த்த தொழில் எதிரிகள் திட்டம் தீட்டுவார்கள். சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அலைச்சலுக்குத் தகுந்த பலனை அனுபவிப்பீர்கள். நெருங்கிய உறவினருக்கு பண உதவி செய்வீர்கள். உடன்பிறப்புகளால் தொல்லைகளை சந்திப்பீர்கள். .வெளியூர் பயணங்கள் மூலம் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் வைத்துக் கொள்வீர்கள்.

மிதுனம்✅

தேவை இல்லாமல் வாக்குக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். கொடுத்த கடனை திருப்பி கேட்பதில் மனத்தாங்கல் அடைவீர்கள். மனைவி சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பீர்கள். அரசாங்க பைல்களில் கையெழுத்திடும் போது அலட்சியம் காட்டாதீர்கள். .வேலை ஆட்கள் பற்றாக்குறையால் தொழிலில் சிரமப்படுவீர்கள்

கடகம்✅

ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். வெளியூர் பயணங்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். உதவி கேட்டு வருபவர்களின் சிரமத்தைப் போக்குவீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். .

சிம்மம்✅

சிக்கலான வேலையை முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பெட்டிக்கடை வியாபாரிகள் முதலுக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் சிறப்பான வெற்றியை பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். நண்பர்களோடு உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள்.

கன்னி✅

வியாபாரத்தில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். தொழிலுக்காக தேவைப்பட்ட பணம் கைக்கு வந்து சேர்ந்து உற்சாகமடைவீர்கள். கட்டிடத் தொழிலில் இருப்பவர்கள் ஓய்வின்றி வேலை பார்ப்பீர்கள். இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் புகழையும் அந்தஸ்தையும் உயர்த்துவீர்கள். கேலியாக பேசி வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள்

துலாம்✅

அடுத்தவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். கூலி வேலை பார்ப்போர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து குதூகலம் அடைவீர்கள். தந்தையார் மூலம் பணவரவு பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் எண்ணத்திற்கு விதை போடுவீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள்

விருச்சிகம்✅

வேலை சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்கள் போடுவதை நிறுத்தி வையுங்கள். வாகனங்கள் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள். வெளியூரில் இருந்து வரவேண்டிய நல்ல செய்தி தாமதமாகும். கடன் பிரச்சனையால் தலை குனிவு அடைவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்கள் வந்து மன வேதனைப்படுவீர்கள்..சந்திராஷ்டம காலம். பொறுமை தேவை

தனுசு✅

துவண்டு கிடந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த வேலை செய்வீர்கள். சிறு வியாபாரிகள் சீரான லாபத்தைப் பெறுவீர்கள். கடன் பிரச்சனை கை மீறிப் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள். இரும்புத் தொழில் செய்பவர்கள் எதிர்பாராத ஏற்றம் பெறுவீர்கள்.

மகரம்✅

வேலைப்பளு அதிகரிப்பதால் மூச்சு விட முடியாமல் திணறுவீர்கள். கடின உழைப்பால் அதிகாரிகளை திருப்திப்படுத்துவீர்கள். உடன் வேலை செய்பவர்களால் உபத்திரவங்களைச் சந்திப்பீர்கள். சிறிய வியாபாரிகள் கடன் கொடுப்பதில் கண்டிப்புக் காட்டுவீர்கள். காய்கறி வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். வெளியூரிலிருந்து வந்த நல்ல செய்தியால் குதூகூலம் அடைவீர்கள்

கும்பம்✅

பூர்வீகச் சொத்துக்களை விற்க முடியாமல் சங்கடப்படுவீர்கள். குழந்தைப் பாக்கியம் இல்லை என்று தவிக்கும் குடும்பத்தில் சந்தான விருத்தி ஏற்பட்டு மன நிம்மதி அடைவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். உங்களுக்கு எதிராகச் செய்யப்படும் சூழ்ச்சிகளை முனை மழுங்க செய்வீர்கள். வேலை இடத்தில் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள்.

மீனம்✅

சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் குடி போவீர்கள். தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களில் ஏற்றம் காண்பீர்கள். பரம்பரைச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால் கடன் வாங்குவீர்கள். தோப்பு குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமாக நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமான லாபம் அடைவீர்கள்.

 

Related Post

Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்

Posted by - July 10, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு…

திருமண கோலத்தில் பிக் பாஸ் ஷிவானி.. அவரே வெளியிட்ட வீடியோ, இதோ

Posted by - August 14, 2023 0
ஷிவானி நாராயணன் பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்து வந்தார்.…

நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8

Posted by - November 15, 2024 0
விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய போட்டியாளர்கள்

Posted by - January 9, 2025 0
#biggbossseason8 #Muthukumaran #Soundarya #Jacqueline #biggbossjiocinema #vijaythalapathy #BiggBoss8Tamil #biggbosstamil #BiggBossTamil8 #bigboss8 #vote #vijaysethupathi #BIGBOSS2024 #bigboss #jacquelinefernandez #jacquelinefernandezhot #jacquelinefan #bb8 #vjvishal #rayan…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *