உடல் எடையை குறைக்கும் கொள்ளு அடை

244 0

கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.தேவையற்ற கொழுப்பை நீக்கி, உடல் எடையை குறைக்கும் கொள்ளு அடை.! - Seithipunal

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 1 கப்,

அரிசி – 1/4 கப்,

காய்ந்த மிளகாய் – 5,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க :

எண்ணெய் – 1 டீஸ்பூன்,

கடுகு – 1/4 டீஸ்பூன்,

சீரகம் – 1/4 டீஸ்பூன்,

சோம்பு – 1/4 டீஸ்பூன்,

உடைத்த உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

வெங்காயம் – பாதி

இஞ்சி – சிறிய துண்டு,

பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளு, அரிசி இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கரைத்து 2 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான சத்தான கொள்ளு அடை தயார்.

Related Post

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - January 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

Posted by - July 15, 2023 0
தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால்…

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. லிஸ்ட் இதோ

Posted by - July 12, 2025 0
சம்பளம் ரஜினிகாந்த், விஜய், அஜித், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், நடிகைகளில் யார்யார் அந்த…

தொப்பையை குறைக்க உதவும் வக்ராசனம்

Posted by - February 24, 2023 0
‘வக்ரா’ என்றால் முறுக்குதல். ஆசனத்தின் உச்சநிலையில் உடலை முறுக்கிய நிலைக்குக் கொண்டுவருவது. செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொள்ளவும். நேராக நிமிர்ந்து வலது காலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *