‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’ அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

283 0

Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையில் முதலமைச்சரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.

முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆழ்வார்பேட்டையில் உள்ள  இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும்  துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து கட்சி கொடி கட்டிய தனது பழைய காரில் புறப்பட்டு ஆளுநர் மாளிகை வருகை தந்தார். அவருடன் அவரது தாயார் துர்காவும் வந்தடைந்தார்.இந்த விழாவிற்கு 400 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.  ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, திமுக எம்.பி கனிமொழி, செந்தாமரை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

Related Post

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

Posted by - December 11, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து…

முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

Posted by - December 4, 2023 0
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக்…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

Posted by - October 9, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதமாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கள்ளப்புலியூர், கொண்டான்குடி , பாகவதபுரம் உள்ளிட்ட கிராமங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *