எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா! கமல் முன்பே சொன்ன வார்த்தை

239 0

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே இருந்தது.

விசித்ரா சமீப காலமாக மாயா கேங்கில் ஐக்கியமாகி இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே பூர்ணிமாவும் பணப்பெட்டி உடன் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மாயா கேங் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சீசனில் டாம் அண்ட் ஜெரி போல சண்டை போட்டுக்கொண்டிருந்த தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவரை இன்றைய எபிசோடில் கமல் சமரசம் பேசி கைகொடுக்க வைத்தார். அதன்பின் தான் எலிமினேஷன் கார்டை காட்டி விசித்ராவை வெளியேற்றினார்.

பிக் பாஸிலிருந்து எவிக்ட் ஆன விசித்ரா! வெளியிட்ட முதல் காணொளி - மனிதன்

வெளியில் வந்த பின்னும் இப்படியா

விசித்ரா வெளியில் வந்து கமல் உடன் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் இருப்பவர்களுடன் பேசும் வாய்ப்பை கொடுத்தார்.

அப்போதும் தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை பார்த்து கமலே ஷாக் ஆகி ‘கையெல்லாம் குடுத்தீங்க… ஆனா எவிக்ட் ஆன பிறகும் தொடருது பாருங்க’ என விமர்சித்தார்.

மேலும் அர்ச்சனாவை குறிவைத்த விசித்ரா ‘உனக்குத்தான் சமைக்க தெரியும்னு சொன்னியே, இப்போ காமி. நெறைய வேலைகள் தெரியும்னு சொன்னியே, இப்போ ஒரு நாலு நாள் காமி’ என கூறினார்.

அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு இருந்து வரும் நிலையில் அதை குறைக்கத்தான் விசித்ரா இப்படி எல்லாம் கமல் முன் பேசினாரா என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Post

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான்

Posted by - December 2, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 சீசன் தான் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி…

அன்பே வா சீரியலில் இருந்து வெளியேறிய டெல்னா டேவிஸ்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

Posted by - November 3, 2023 0
தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக…

நீரிழிவு நோயாளிகளுக்கு சத்து நிறைந்த ரொட்டி

Posted by - March 17, 2023 0
சிவப்பரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிவப்பரிசியில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது தேவையான பொருட்கள் சிவப்பரிசி – 1 கப் வெங்காயம் –…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!

Posted by - October 17, 2023 0
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *