ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

215 0

சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.

ஏழரை சனி என்றாலே எல்லாருக்கும் ஒருவித பய உணர்வு ஏற்படும். ஏழரை சனி நடக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதிலும் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்றுதான் நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் தற்போது நடக்கும் இந்த ஏழரை சனியிலும், சனி பகவான் தனது அருளை சில ராசியினருக்கு வழங்குகிறார். அந்த ராசியினர் யார் யார் என்று தெரிந்துக் கொள்வோம் வாங்க…

சனி பெயர்ச்சி எப்போது?

சனி 2022 ஏப்ரல் 29 முதல் கும்ப ராசியில் இருப்பார். 2022 ஜூலை 11 ஆம் தேதி வரை கும்ப ராசியில் இருக்கும் சனி, அதன் பின் மகரத்திற்கு மாறி ஜனவரி 18, 2023 முதல் மார்ச் 29, 2025 வரை இருப்பார். கும்ப ராசியில் சனி பகவான் இருக்கும் போது, அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.

இப்போது மகரத்தில் இருந்து கும்பத்திற்கு மாறும் சனிபகவான் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், பணம், குடும்பம், கல்வி, திருமண வாழ்க்கை, அதிர்ஷ்டம் வியாபாரம், பாவ புண்ணியம், லாபம் மற்றும் செலவுகள் என வாழ்க்கையில் பல விஷயங்களில் எந்த மாதிரியான பலனைக் கொடுக்கப் போகிறார் என்பதைக் காண்போம்.

சனி பெயர்ச்சி என்றால் என்ன?

சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை சனி என்பது நம் ஜாதக கட்டத்தில் சந்திரன் நின்ற ராசியை ஜென்ம ராசி என்பர்.

ஜென்ம ராசிக்கு முந்தைய ராசி அதாவது 12-ஆம் இடத்தில் சனி பெயர்ந்து வரும்போது ஆரம்பித்து இரண்டரை வருடம்.

ஜென்ம ராசிக்கு சனி பெயர்ந்து வந்த இரண்டரை வருடம்.

ஜென்ம ராசிக்கு அடுத்த ராசி அல்லது இரண்டாமிடத்தில் சனி பெயர்ச்சியாகி இரண்டரை வருடம். ஆக மூன்று இரண்டரை வருடங்கள், மொத்தம் ஏழரை வருடங்கள் சனி பெயர்ச்சியால் நமக்கு சனி கிரகத்தின் அதிர்வின்படி பலாபலன் ஏற்படும் காரணத்தால் அதற்கு பெயர் “ஏழரைச்சனி” என்பதாகும்.

பொதுவாக, சனி பகவான்- ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு 3,6,11 ஆகிய இடங்களில் வரும் போதெல்லாம் நன்மைகளை வாரி வழங்குவார். அப்போது அவர் வள்ளல். ஏன்? குரு போன்ற சுபக் கிரகங்கள் கூட அந்த அளவுக்கு நன்மையை செய்ய முடியாது. அவ்வளவு நன்மையை சனி செய்வார். ஆனால், அதே சனி 12,1,2,4,5,7,8,9,10 ஆகிய இடங்களுக்கு வரும் போதெல்லாம் நம்மை பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துவார். அதிலும் 12,1,2 ஆகிய இடங்களில் வரும் போது அதனை ஏழரைச் சனி என்று சொல்வோம். அந்தக் காலத்தில் தான் அதிகம் பேருக்கு திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும்.

சனி ஏற்கனவே சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அருளை அள்ளி வழங்குவதால், இவர்கள் சனிபகவானை வழிபட்டால் வாழ்வில் அனைத்தும் கிடைக்கும். அபரிமிதமான செல்வம், கௌரவம் மற்றும் வெற்றியைப் பெறுவார்கள். ஆனால் அவர்கள் தங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார். இவர்கள் நல்ல காரியங்களைச் செய்தால், சனி பகவானின் அருளை பெறலாம்.

ரிஷபம்

ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் சுக்கிரனுடன் சனியின் உறவு நட்பாக இருக்கும். அதனால்தான் சனியின் பாதிப்பு இங்கு மிக குறைவு. எனவே, சனி எப்போதும் ரிஷப ராசியினரிடம் கருணை காட்டுகிறார். ரிஷபம் சனியின் அருளால் வாழ்வில் பெரும் வெற்றி பெற்று, சவால்கள் அனைத்தையும் தாண்டி உயரத்தை அடையலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

துலாம்

சனி தேவரின் விருப்பமான ராசியாகும். ஏனெனில் சுக்கிரனுக்கு சொந்தமான ராசி.நேர்மையான ஆளுமைக்கு சொந்தக்காரரான துலாம் ராசிக்காரர்கள் சனியின் அருளால் அதிர்ஷ்டசாலிகள் ஆவர். அவர்கள் மிகவும் வெற்றிகரமானவர்கள் மற்றும் அபரிமிதமான பணமும் மரியாதையும் பெறுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்கு அதிபதி சனி தேவன். எனவே, அவர்களுக்கு சனியின் தாக்கம் தெளிவாகத் தெரியும். இத்துடன் சனியின் அருளும் அவர்கள் மீது வாழ்நாள் முழுவதும் இருக்கும். இந்த மக்கள் எப்போதும் ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள். இதனால் வாழ்க்கையில் நிறைய மரியாதையும் கவுரவமும் அவர்களுக்கு கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் அதிபதியும் சனி தேவன் தான், அவர் எப்பொழுதும் அவரிடம் கருணை காட்டுபவர். ஏழரை நாட்டு சனியிலும் சனி பகவான் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். ஜோதிடத்தில் மகர ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.

Related Post

பெரிய உசுரு போக போகுது.. சக்திக்கு என்னாச்சு? எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

Posted by - November 13, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மை பெண்கள் எல்லோருக்கும் தெரியவந்துவிட்ட நிலையில் கதை இனி எப்படி நகர போகிறது என ரசிகர்கள்…

திருமணம் செய்ய விருப்பம் தான், ஆனால்?- ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா பதில்

Posted by - May 8, 2023 0
நடிகை ரேஷ்மா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமாகி இருப்பவர் ரேஷ்மா. நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் இப்போது…

சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய சீரியல்- வாய் பிளக்கும் ரசிகர்கள்

Posted by - July 14, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொடர். இவர்கள் டிவி ஆரம்பித்த நாள் முதல் தொடர்களில் தான் அதிகம் கவனம்…

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு புதிய நபர்கள்.. சூடு பிடிக்கும் போட்டி

Posted by - November 13, 2023 0
பிக் பாஸ் இதுவரை நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக நிக்சன்…

இன்றைய ராசி பலன்(4.3.2023)❤️

Posted by - March 4, 2023 0
இன்றைய ராசி பலன்(4.3.2023)❤️ மேஷம்✅ உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கை மிக்கவரான நீங்கள் எந்தச் செயலையும் தவிர்க்காமல் திறம்படச் செய்வீர்கள். மனதில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *