ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

97 0

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின் கடல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இவருக்கு சரியான கம்பேக் படம் என்றால் அது, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன்தான். இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்தில் அருள்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நம்மை நெகிழ வைத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் காந்தி டாக்ஸ் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உருக்கமான பேச்சு

இந்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி பேட்டி ஒன்றில், ‘தான் ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.இதில், “2005ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் என்னை ஒன்றரை வருடம் படுக்கையிலேயே வைத்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என முடிவு செய்ததால், அந்த வலி நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில், கேரளாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தேன். சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்” என அரவிந்த் சாமி கூறியுள்ளார். 

Related Post

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - September 29, 2023 0
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கே.ஜி.எப் 2. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான்…

2022: எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. ஆனாலும் ஏமாற்றம்.. 2022ல் புஷ்வானமாகிய படங்களின் லிஸ்ட்!

Posted by - December 26, 2022 0
2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களின் பட்டியலை  காணலாம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படம்…

கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

Posted by - October 30, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் லியோ. இதற்குமுன் இவர் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லியோ படத்தில் மீண்டும்…

வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா?

Posted by - December 18, 2022 0
வாரிசு விஜய்யின் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.  …

தனுஷின் ராயன் பட இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.. ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்கு..!

Posted by - May 16, 2024 0
தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் பட இசை வெளியீட்டு விழா, காத்திருக்கும் பிரம்மாண்டம்.. நடிகர், இயக்குனர், தயரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *