கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

292 0

திருவனந்தபுரம் :

கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.கடன்பட்டது 100 ரூபாய்... 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி  கொடுத்த ஆசிரியர் | Credit rs 100 teacher returned 10 thousand rupees after  30 years

இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்…அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-

கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.

இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.

தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Post

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - August 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

Posted by - June 7, 2023 0
புதுடெல்லி: டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த…

இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

Posted by - November 6, 2025 0
ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ்…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

Posted by - June 30, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *