கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்…

311 0

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, அந்த அணியின் சிக்கந்தர் ராசா 3 ரன்கள் எடுத்து பஞ்சாபை வெற்றி பெறச் செய்தார். கடைசி பந்து வரை பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். மொயின் அலி 10 ரன்களும், ஜடேஜா 12 ரன்களும் எடுத்தனர்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி கடைசி வரை களத்தில் நின்றார். 1 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளை விளாசிய கான்வே 92 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தார். கடைசி நேரத்தில் தோனி களத்தில் இறங்கினாலும், சாம் கரன் வீசிய 20 ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். கேப்டன் ஷிகர் தவான் 28ரன்களும் அதர்வா டைடே 13 ரன்களும் எடுத்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் 4 சிக்சர்களுடன் 24 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் சேர்த்தார். சாம் கரன் 29 ரன்களும், ஜிதேஷ் சர்மா 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்கந்தர் ராசா 3 ரன்கள் எடுதது அணியை வெற்றி பெற வைத்தார்.

Related Post

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

தோனி மீது பதிவான 10 புகார்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்… காரணம் இதுதான்…!

Posted by - May 18, 2023 0
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. விளம்பர விதிமுறைகளை மீறியதாக தோனி…

தோனியிடம் இருந்து கைமாறிய கேப்டன் பதவி… ரோஹித் போட்ட ஒற்றை போஸ்ட்

Posted by - March 22, 2024 0
தல தோனியை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா போட்டுள்ள  இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்திருக்கிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர், இன்று சென்னை…

தோனி ‘7’ம் நம்பர் ஜெர்சியை மாற்றுவதன் பின்னால்… இப்படி ஓர் பின்னணி இருக்கா?

Posted by - March 18, 2026 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியதில் இருந்தே தோனி 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ஆம்…

கடைசி பந்து வரை உச்சக்கட்ட பரபரப்பு… 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது தல தோனி படை..!

Posted by - May 30, 2023 0
மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *