கப்சிப் விஜய்.. அரசியல் பக்குவம் இல்லையா? காட்டிகொடுத்த மாநாடு

212 0

Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில், விஜய்யின் அரசியல் பேச்சுகள் ரசிகர்களிடையே கைதட்டலை பெற்றன.

“திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி”

விஜய் தனது உரையில், “திமுக தான் எனக்கு அரசியல் எதிரி, பாஜக தான் கொள்கை எதிரி” என்று தெளிவாக குறிப்பிட்டார். இந்த வரிகள், அவர் எந்த திசையில் தனது அரசியல் பயணத்தை நகர்த்துகிறார் என்பதை வெளிப்படுத்தின. மேலும், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் மக்களின் பேராதரவை பெற்ற எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் நினைவுகளையும் தனது உரையில் எடுத்துரைத்தார்.

முக்கிய பிரச்சினைகளில் மவுனம்?

ஆனால், சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுவது, விஜய் சில முக்கியமான பிரச்சினைகளை தனது உரையில் எதுவும் பேசவில்லை என்பதற்காக. குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த அஜித்குமார் வழக்கு குறித்தும் அவர் மவுனமாக இருந்தார். அதேபோல், சமீபத்தில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டமும், அவர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கையும் பற்றி மாநாட்டில் ஒரு வார்த்தை கூட அவர் குறிப்பிடவில்லை.

சினிமா வசனம் மாநாட்டில், அரசியல் பேச்சு ட்விட்டரில்!

சிலர் சமூக ஊடகங்களில், “மாநாட்டில் பேச வேண்டியதை ட்விட்டரில் பேசுகிறார், சினிமாவில் பேச வேண்டிய வசனங்களை மாநாட்டில் சொல்கிறார்” என்று விமர்சிக்கிறார்கள். இதனால், “விஜய்க்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை” என்ற கருத்து டிரெண்டாகியுள்ளது.

ரசிகர்களின் பாராட்டு – விமர்சகர்களின் சந்தேகம்

விஜய்யின் ரசிகர்கள், “அவர் எந்த அரசியல் கட்சியையும் நேரடியாக தாக்காமல், தன்னுடைய கொள்கையை வெளிப்படுத்தியிருப்பது பெரிய விஷயம்” என்று பாராட்டுகின்றனர். ஆனால் விமர்சகர்கள், அரசியல் அரங்கில் நிலைப்பாட்டை காட்ட வேண்டிய நேரத்தில், விஜய் ரசிகர்களை கவரும் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அடுத்த கட்டம்?

விஜய் லட்சகணக்கான மக்கள் கூடும் இடத்தில் அவர்களுக்கான பிரச்சனையை தைரியமாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு வார்த்தை ஜாலங்களை காட்டிக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைந்து விடும் என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

Related Post

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக!

Posted by - April 11, 2026 0
சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கி  இருந்தும் தவெக இந்த பிரசாரங்களை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் சட்டமன்றத்…

தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?

Posted by - October 13, 2025 0
தவெக-வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவானவர்களாகவும், நெருக்கடியை திறம்பட சமாளிப்பவர்களாக இல்லாததும் விஜய்க்கு பின்னடைவாக உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில்…

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *