கருணாநிதி கைது விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்!

281 0

திருவனந்தபுரம்: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (வயது 96) முதுமை காரணமாக கேரளாவில் இன்று காலமானார். நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் பாத்திமா பீவி.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா ராவுத்தர் குடும்பத்தில் 1927-ம் ஆண்டு அன்னவீட்டில் மீரா சாகிப்- கதீஜா பீவி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவர் பாத்திமா பீவி. சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். நாட்டின் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமைக்குரியவர்.

1989-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணி புரிந்தார். 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோளின்படி பாத்திமா பீவி, தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இறுதியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்தார் பாத்திமா பீவி. அதேபோல மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் சாலிஹூ நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி.

பின்னர் 2001- தேர்தலில் எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் ஜெயலலிதாவுக்கு முதல்வர் பதவி பிரமாணம் செய்து வைத்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார் பாத்திமா பீவி. 2001 ஜூன் 30ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான நள்ளிரவு கைது நடவடிக்கையின் போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் ஆளுநர் பதவியில் இருந்த பாத்திமா பீவி.

மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டிஆர் பாலு அப்போது கைது செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக அறியப்பட்டார். இந்த சம்பவங்களால் மத்திய அரசால் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பாத்திமா பீவி. ஆளுநர் தமது கடமையில் இருந்து தவறியதாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் பாத்திமா பீவி. அவருக்கு பின்னர் தற்காலிக ஆளுநராக ஆந்திரா ஆளுநர் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார்.

பின்னர் கேரளா சென்றார் பாத்திமா பீவி. அண்மையில் வயது முதுமை காரணமாக உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 96 வயதில் காலமானார் பாத்திமா பீவி.

Related Post

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…

“கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர் தேர்வா?! தரமாக கலக்கும் தலைவர் விஜய்!”

Posted by - January 27, 2024 0
தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது…

காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

Posted by - November 25, 2023 0
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

Posted by - December 3, 2022 0
ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *