கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி

342 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்த ராணுவ வீரரை உயிரோடு  எரித்து கொன்ற மனைவி | Tamil News pooja vari palle near husband murder case  police inquiry

கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து மம்தா போலீசில் புகார் செய்தார்.போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கணவரின் தொல்லை தாங்க முடியாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மம்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். நள்ளிரவில் மம்தா கணவர் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஸ்ரீதர் வலியால் அலறி துடித்தார். ஸ்ரீதரின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் மாடிக்கு ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்… `பகீர்’ கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

Posted by - August 1, 2023 0
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை…

கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள்.. விபத்து நேர்ந்தது எப்படி…?

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் – ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?

Posted by - November 6, 2025 0
Airtel Vs Jio Vs Vi: ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள், ஒரே மாதிரியான ரீசார்ஜ் கட்டணத்தில் முற்றிலும் வித்தியாசமான பலன்களை வழங்குவது குறித்து…

எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா- சி.எம்.சி. தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு

Posted by - April 27, 2023 0
கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *