இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், குழந்தைகள் மாயம்… `பகீர்’ கிளப்பும் NCRB ரிப்போர்ட்!

334 0

ந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அரசு இயந்திரங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வந்தாலும், பெண்களுக்கு எதிரான கொடுங்குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், இந்தியா முழுவதும் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டு காலகட்டத்தில், 13 லட்சம் குழந்தைகள் மற்றும் பெண்கள் காணவில்லை என்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை, தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியாவில் மூன்று ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்" - அதிர்ச்சி  அளிக்கும் அரசின் தரவுகள்!,  morethan-thirteen-lakhs-girls-women-missing-in-three-years-govt-data

NCRB மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10,61,648 பேரும், 18 வயதுக்குக் கீழான 2,51,430 சிறுமிகளும் 2019 முதல் 2021 வரையிலான இந்த மூன்றாண்டுக் காலகட்டத்தில் காணாமல்போயிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

அதில் அதிகப்படியான பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல்போன மாநிலங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் 1,60,180 பெண்களும், 38,234 சிறுமிகளும் மூன்றாண்டுகளில் காணாமல்போயிருக்கின்றனர்.

பட்டியலில் இரண்டாவது மாநிலமாக, மேற்கு வங்கத்தில் 1,56,905 பெண்களும், 36,606 சிறுமிகளும் காணாமல்போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல மகாராஸ்டிராவில் 1,78,400 பெண்களும், 13,033 சிறுமிகளும் காணாமல்போயிருக்கின்றனர் என்ற தரவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள், எதற்காக காணாமல்போனார்கள், இவர்கள் காணாமல்போனதற்கான காரணங்கள் என்ன என்று, இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று என்.சி.ஆர்.பி தெரிவித்திருக்கிறது. ஆனால் தெலங்கானாவில் மட்டும் காணாமல்போன பெண்கள் மற்றும் சிறுமிகளில் 87 சதவிகிதம் பேர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநிலக் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

பெண் கடத்தல் அந்த மாநிலக் காவல்துறையானது கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல்போன பெண்கள் மற்றும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேரை மீட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. அப்படி மீட்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு பாலியல் சுரண்டல்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை முறை, கட்டாயப்படுத்தி யாசகம் செய்ய வைப்பது, குழந்தைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தப்படுவது போன்ற கடுமையான குற்றச் செயல்களுக்கு நல்வாய்ப்பாக ஆளாகவில்லை

தெலங்கானா காவல்துறை காணாமல்போனவர்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தெலங்கானா காவல்துறை பதிவுசெய்து, உடனடியாக அதற்கு ஏற்றவாறு விசாரணை நடத்தி, காணாமல்போனவர்களை விரைவாகக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை மீட்பதிலும், அதன் பிறகு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி பாதுகாப்பு அளிப்பதில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக இருக்கிறது” என்று தெலங்கானா காவல்துறை தெரிவித்திருக்கிறது.

 

Related Post

புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு: பாராளுமன்றத்தில் மசோதா அறிமுகம்?

Posted by - December 12, 2023 0
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது. என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு,…

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…

போன் தொலைஞ்சா, அக்கவுண்ட்ல காசு காணாம போனா இனி போலீசுக்கு போக வேண்டாம்.. இந்த நம்பருக்கு ஒரு கால் போதும்

Posted by - July 31, 2024 0
Cybercrime: சைபர் கிரைம் தற்போது இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணப்பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமானதிலிருந்து அக்கவுண்டில் இருந்து பணம்…

தென்னாப்பிரிக்கா தொடரை வென்ற இந்தியா.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா

Posted by - November 16, 2024 0
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 4 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது. நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *