காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை வெட்டிக் கொல்ல காதலனுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாணவி

309 0

தேனி:

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி வாசவி நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபாலபாண்டியன் (வயது 55) பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.Homicide v. murder - iPleaders

இதில் பலத்த காயமடைந்த வேணுகோபாலபாண்டியன் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி உமா மகேஸ்வரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த அழகுமலை மகனான கார் டிரைவர் முத்து காமாட்சி (23), அவரது நண்பர்களான மூர்த்தி மகன் செல்வக்குமார் (23), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணப்பன் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

எதற்காக இரும்பு வியாபாரியை கொல்ல முயன்றனர்? என போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- வேணுகோபால பாண்டியனின் மகள் 16 வயதுடைய பிளஸ்1 மாணவியும், முத்து காமாட்சியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.

மேலும் பெரியகுளத்தில் உள்ள பாட்டி வீட்டில் அவரை தங்க வைத்துள்ளனர். அங்கு சென்றும் முத்துகாமாட்சி மாணவியுடன் பேசி பழகி வந்துள்ளார். மேலும் மாணவி பயன்படுத்தி வந்த செல்போனையும் பெற்றோர்கள் பறித்துக் கொண்டனர். காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் தந்தையை கொலை செய்ய மாணவி முடிவு செய்துள்ளார். இதனை தனது காதலனிடம் கூறியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று வேலை முடித்து தனியாக வந்து கொண்டு இருந்த இரும்பு வியாபாரி வேணுகோபால பாண்டியனை மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

ஆனால் அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். அரிவாளால் வெட்டி விட்டு முத்து காமாட்சி தனது காதலிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். சரியாக வெட்டினாயா? இல்லையா? அவர் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என கேட்டு தனது காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். போலீசார் முத்துகாமாட்சியின் செல்போனை வாங்கி பார்த்த போது மாணவி அனுப்பிய குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வியாபாரியை அரிவாளால் வெட்டிய 3 பேர் மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மகள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Post

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

Posted by - January 2, 2024 0
திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்…

தீக்காயம் ஏற்பட்டால் கண்களைப் பாதுகாப்பது எப்படி?

Posted by - October 18, 2025 0
கடந்த தீபாவளித் திருநாளில் 10 வயது பெண் குழந்தை புஸ்வாணத்தைப் பற்ற வைத்தது. ஆனால், புஸ்வாணம் மத்தாப்புகளை உதிர்க்கவில்லை. உடனடியாக அந்தக் குழந்தை புஸ்வாணத்தின் திரியைச் சரிசெய்ய,…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில்…

பள்ளிகள் திறப்பு எப்போது? தள்ளிப்போக வாய்ப்பு? அமைச்சர் அன்பில் சொன்னது என்ன?

Posted by - May 22, 2025 0
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *