கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

241 0

2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன தெரியுமா.?

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

“கூட்டணி வைக்க வேண்டும் என்றால் 40 தொகுதிகள் வேண்டும்“

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொகுதி வாரியாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பிரேமலதாவிடம் நிர்வாகிகள் பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்வைத்ததாக தெரிகிறது. அதன்படி, எந்த கட்சியுடன் கூட்டணிக்கு சென்றாலும், அவர்களிடம் 40 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தேமுதிக-விற்கு யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏனென்றால், கடந்த தேர்தலின் போது அதிமுக தங்களை சரியாக மதிக்கவில்லை என்றும் முழுமையான ஒத்துழைப்பை தரவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நிர்வாகிகள் வைத்த மற்ற கோரிக்கைகள் என்ன.?

அதோடு ஒரு முக்கிய கோரிக்கையாக, தேமுதிக-விற்கான தொலைக்காட்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல், 6 மாதங்களுக்கு ஒரு முறை பல்வேறு தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், தேமுதிகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளை பலப்படுத்துவதுடன், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அந்த தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதோடு, கட்சிக்காக செலவு செய்வதற்கு நிர்வாகிகளிடம் போதிய அளவிற்கு பணம் இல்லை என்றும், தேர்தல் செலவுகளுக்காக தலைமைக் கழகத்தில் இருந்து பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

“அதிமுக, பாஜக எதுவும் செய்யவில்லை“

மொத்தத்தில், பாஜக, அதிமுக கூட்டணி நமக்கு எதுவும் செய்யவில்லை என்றும், அதனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் எனவும், தேமுதிகவிற்கு அங்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தலுருக்கான நாட்கள் வேகமாக கரைந்து வரும் நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. ஆனால், தேமுதிக அந்த விஷயத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. எந்த பக்கம் சாய்வது என்ற முடிவை இன்னும் அந்த கட்சியின் தலைமை எடுக்கவில்லை.

சரியான நேரம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என பிரேமலதா விஜயாகாந்த் கூறி வருகிறார். அந்த நேரம் எப்போது வருமோ என அக்கட்சியின் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

 

Related Post

பிறந்தது கார்த்திகை… அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!

Posted by - November 17, 2025 0
சிவபெருமான்,முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. காலை முதல் ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர். ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்…

என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்

Posted by - August 29, 2025 0
நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

Posted by - January 9, 2023 0
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர் துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள்…

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து – திமுக அறிவிப்பு

Posted by - June 3, 2023 0
கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை…

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - February 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *