கேரளாவில் கனமழை- 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

219 0

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த கனமழை 27-ந்தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை | Tamil News Rain Warns 9  districts in kerala

இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.8 மீட்டர் முதல் 3.3 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், வயநாடு மாவட்டத்தில் மண் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்தும் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கட்டுமான தள செயல்பாடுகளுக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். கனமழையால் மண் சரிந்து சாலையில் பாதுகாப்பு சுவர் சேதமடைந்து இருப்பதால் மானந்தவாடி-கைதக்கல் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறை தடை விதித்துள்ளது.

Related Post

பழைய டிவி காலி.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 40W டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

Posted by - December 11, 2024 0
பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது.…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

சிங்கத்திடம் சிக்கிய பசு – செங்கலை எறிந்து காப்பாற்றிய விவசாயி- வைரலாகும் வீடியோ

Posted by - July 1, 2023 0
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும். இந்நிலையில், கிர் வனப்பகுதியில்…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

ராபிடோ புக் செய்த கேரள பெண்.. வன்கொடுமை செய்த ட்ரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Posted by - November 30, 2022 0
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *