ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

233 0

ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுனை காவல்துறையினர் இன்று விசாரணை அழைத்து சென்றுள்ளனர், ஆனால பல ஊடகங்களில் இவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரின் அறிக்கையின்படி, டிசம்பர் 4ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளார், அவரை நெருக்கமாகப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறியதால் மோசமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பலர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு காயங்களுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவத்தில் 39 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் பெயர் ரேவதி, அவர் தில்சுக்நகரைச் சேர்ந்தவர். தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், அப்போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தற்போது சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவர் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அல்லு அர்ஜுன் சம்பளம்: புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தைத் தயாரித்தது மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமாரன் ரைட்டிங்ஸ். இந்த 300 கோடி ரூபாய் சம்பளத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹூக்கர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

பொதுவாக பாலிவுட்டில் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடிக்க சம்பளமாக வாங்காமல் படத்தின் வசூலில் ஒரு சிறு பங்கீட்டை வாங்கும் வழக்கம் கொண்டு உள்ளனர். ஆனால் சில படங்களுக்குச் சம்பளமும் வாங்குகின்றனர், இப்படி சம்பளம் வாங்குவோர் பட்டியலில் அல்லு அர்ஜுன் முதல் புஷ்பா 2 படத்தின் மூலம் முதல் இடத்தை பிடித்துள்ளார். அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு: தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுன், சுமார் 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பணக்கார நடிகராக உள்ளது. அவரது வருமானம், சொத்து மதிப்பு வெறும் நடிப்பை மட்டும் சார்ந்தது அல்ல; முதலீடுகள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பெரும் வருமானத்தை ஈர்த்து வருகிறார். அல்லு அர்ஜுன் வீடு: அவரது சொத்துக்களில், ஹைதராபாத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடு மிகவும் முக்கியமான ஒன்று. அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிற முக்கிய சொத்துக்கள்: அவரது சொத்து மதிப்பில் ஒரு பிரைவேட் ஜெட் , அவரது ஆடம்பர வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது, அத்துடன் பல ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் உயர் ரக சொகுசு வாகனங்களின் கலெக்ஷனும் அடங்கும். ப்ரோமோஷன் மற்றும் பிராண்ட் என்டோர்ஸ்மென்ட்: சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு விளம்பர பதிவிற்கும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார் அல்லு அர்ஜூன். இது தவிர KFC, Frooti, RedBus, Hero MotoCorp, Hotstar மற்றும் Rapido உள்ளிட்ட பல பிரபலமான பிராண்டுகளுடன் அவர் விளம்பர தூதராக பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். ஒவ்வொரு விளம்பர ஒப்பந்தத்திற்கும் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை அவர் கட்டணம் வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய முதலீடுகள்: விளம்பரங்கள் மற்றும் நடிப்பைத் தவிர, அல்லு அர்ஜுன் உணவு மற்றும் மதுபானத் துறையில் முதலீடுகளைச் செய்துள்ளார். ஹைதராபாத்தில் பிரபலமான அமெரிக்க ஸ்போர்ட் பார் மற்றும் உணவக சங்கிலியின் உரிமையாளராக உள்ளார். பிற முக்கிய வர்த்தகம்: 2022 ஆம் ஆண்டில், அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அல்லு ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இது மட்டும் அல்லாமல் கீதா ஆர்ட்ஸ் என்ப தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை அவரது குடும்பம் நடத்தி வருகின்றது. மேலும், ஹைதராபாத்தின் அமீர்பேட்டையில் ஒரு மல்டிபிளக்ஸ் வைத்துள்ளார். அவரது தந்தை அல்லு அரவிந்த், Aha என்ற ஸ்ட்ரீமிங் தளத்தின் உரிமையாளராக உள்ளார். அல்லு அர்ஜுன் அதன் பிராண்ட் தூதராகவும் செயல்படுகிறார். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனமான கால்ஹெல்த் சர்வீஸிலும் குடும்பம் முதலீடுகளைக் கொண்டுள்ளது. இது அவர்களின் பல்வேறு வணிக நலன்களை மேலும் நிரூபிக்கிறது. சுருக்கமாகக் கூறினால், அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான வணிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். ஆனால் இந்த வழக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும், பிஸ்னஸையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

Posted by - September 13, 2023 0
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன்…

90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

Posted by - July 29, 2023 0
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக…

தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Posted by - December 25, 2025 0
இந்தியா ரயில்வே, தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது OTP (One…

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே கண்டனம்..!!

Posted by - February 16, 2024 0
காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *