கொங்கு ஸ்டைலில் சுவையான கோழி குழம்பு எப்படி செய்வது.?

198 0

 கொங்கு பாணியில் சுவையாக கோழி குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டில் கோழி குழம்பு வைத்தால் சத்தமே இல்லாமல் தட்டு காலியாகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி உண்ணுவார்கள். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் புதிய புதிய சுவையில் உணவுகளை ருசி பார்க்கத்தான் விரும்புகிறார்கள்.

தேவையான பொருட்கள் :

மசாலா அரைக்க தேவையானவை :

  • கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • பெரும்சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • பட்டை – 1
  • கிராம்பு – 4
  • கசகசா – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • இஞ்சி – 1 துண்டு
  • பூண்டு – 15
  • சின்ன வெங்காயம் – 20 – 25
  • தண்ணீர் – 1/2 கப்

குழம்பு செய்ய தேவையானவை :

  • சிக்கன் – 1 கிலோ
  • சின்ன வெங்காயம் – 25
  • தக்காளி – 2
  • துருவிய தேங்காய் – 1/2 கப்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • தேங்காய் அரைக்க வெதுவெதுப்பான நீர் – 1/2 கப்
  • கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா அரைக்க எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிவப்பு மிளகாய், மிளகு, பெரும்சீரகம், சீரகம், கசகசா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

பின்னர் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி அதையும் மற்றொரு தட்டிற்கு மாற்றி ஆறவைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வருத்த மசாலா பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு மைய அரைத்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் வதக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் அலசி வைத்துள்ள கோழி துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் அதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் மற்றும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.

பிறகு கடாயை மூடி சிக்கன் மென்மையாக வேகும் வரை குறைவான தீயில் வைத்து சமைக்கவும். அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

இதற்கிடையே துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி மிருதுவான பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் அதை கோழி குழம்புடன் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

சிக்கன் நன்றாக மென்மையாக வெந்து குழம்பு கொதித்ததும் உங்களுக்கு விருப்பமென்றால் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சிறிதளவு தூவி அடுப்பை அணைக்கவும்.கொங்கு ஸ்டைல் கோழி குழம்பு பரிமாற ரெடி….

Related Post

சாதி வெறி பிடித்தவர்… பெண்களிடம் அத்துமீறல்… திவாகருக்கு ரெட் கார்ட்…

Posted by - November 13, 2025 0
Bigg Boss 9: சக போட்டியாளர் மீது சாதிய ரீதியிலான கருத்துக்களை முன்வைப்பதாலும், பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறுவதாலும் திவாகருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை…

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

Posted by - March 2, 2024 0
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப்…

நரம்பு நோய்களுக்கு எதிரி…..

Posted by - February 15, 2024 0
மாதுளம் பழத்தில் உள்ள எக்கச்சக்கமான ஆரோக்கிய நலன்கள் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக அது சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் பற்றி எக்கச்சக்கமான…

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - February 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

Jio New Plan | ஒரே ரீசார்ஜ் மூலம் 50 ஜிபி டே்டடா…. ஜியோ சூப்பர் பிளான்

Posted by - December 10, 2022 0
Jio Recharge | இந்த திட்டத்தின் மூலமாக 50GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, 64kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *