சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

260 0

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று இன்று 2 முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைபடுத்தக்கூடாது என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் திமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.

இதே போன்று, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், தற்போது உள்ள அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தொகுதி மறுசீரமைப்பால், தங்கள் பிரதிநிதித்துவ பலத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா… மக்களை ஏமாற்றும் பட்ஜெட்…” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Posted by - March 20, 2023 0
தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

“நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்” பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்

Posted by - May 17, 2025 0
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை என ஸ்டாலின் அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *