சப்பாத்தி, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்… உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு

360 0

இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு ஈஸியான, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெள்ளை பூசணி உள்ளதா? அப்படியானால் கர்நாடகா உடுப்பி ஸ்டைலில் வெள்ளை பூசணி குழம்பு செய்யுங்கள்.

இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.சப்பாத்தி, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்... உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி  குழம்பு | Udupi Style Ash Gourd Coconut Curry Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* வெள்ளை பூசணி – 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

* வரமிளகாய் – 4

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மல்லி – 2 டீஸ்பூன்

* வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்

* புளிச்சாறு – 1 கப்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 1

செய்முறை:

* முதலில் வெள்ளை பூசணியை குக்கரில் போட்டு, அதில் சிறிது நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி கிளறி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் புளியை சுடுநீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம், சீரகம், மல்லி, எள்ளு விதைகள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், வெல்லத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, புளி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதை அப்படியே தயாரித்து வைத்துள்ள குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான உடுப்பி ஸ்டைல் வெள்ளைப் பூசணி குழம்பு தயார்.

Related Post

உஷார்… 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

Posted by - April 11, 2023 0
சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாரா

Posted by - July 10, 2023 0
தளபதி விஜய் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கம் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த…

டூர் போகும் போது பணம் இல்லாவிட்டாலும் தங்கலாம்…புதிய வசதியை வழங்கும் OYO!

Posted by - June 22, 2023 0
கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது. சமீபகாலமாக பலன்களை பெற்றுவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை பல…

ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

Posted by - May 1, 2024 0
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *