சிங்கத்திடம் சிக்கிய பசு – செங்கலை எறிந்து காப்பாற்றிய விவசாயி- வைரலாகும் வீடியோ

236 0

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும். இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம் ஒன்று பசு மாடு ஒன்றை இரையாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட பசுவின் உரிமையாளர் தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சிங்கத்திடம் சிக்கிய பசு - செங்கலை எறிந்து காப்பாற்றிய விவசாயி- வைரலாகும்  வீடியோ | Farmer Casually Walks In, Saves His Cow From A Lioness' Death Grip

இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை பெண் சிங்கம் ஒன்று தாக்குகிறது. பசு மாட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிங்கம் அதை இழுக்க முயற்சிக்கிறது.

அச்சமயம் அங்கு வந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி திடீரென ஒரு செங்கலை எடுத்து சிங்கத்தை நோக்கி வீசினார். இதைக் கண்டதும் சிங்கம் பிடியை தளர்த்துவிட்டு காட்டுக்குள் ஓடுகிறது. பசுவும் உயிர் பிழைக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பசுவைக் காப்பாற்றிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Post

840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’: 17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி : மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இந்தநிலையில், ஏர் இந்தியாவை…

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

பயங்கரவாதிகளிடம் சிக்கி துடிதுடித்து மரணித்த மணிப்பூர் மாணவன், ”நீட்” மாணவி- உருக்கமான தகவல்கள்!

Posted by - September 27, 2023 0
இம்பால்: வடகிழக்கு இந்திய மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது மணிப்பூர் மாணவர் மற்றும் மாணவியின் படுகொலைகள். பள்ளி சிறுவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து…

இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

Posted by - September 10, 2025 0
சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய…

இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted by - September 17, 2024 0
புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்த நாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *