இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

206 0

சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார்.

இந்தியத் திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது, குடியரசுத் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக, நம் நாட்டின் இரண்டாவது உயரிய பதவி ஆகும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலையில், 452 வாக்குகளை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்க உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்.

சொந்த ஊர், குடும்பம்

சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்தில், திருப்பூர் மாவட்டம், சந்திராபுரத்தைச் சேர்ந்தவர். 1957ஆம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணனின் தந்தை பொன்னுசாமி, தாய் ஜானகி ஆவர். 1985ஆம் ஆண்டு சுமதி என்பவரை சிபிஆர் மணந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஆர்எஎஸ்எஸ் பின்புலம்

16 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த ராதாகிருஷ்ணன், பாரதிய ஜன சங்கத்திலும் இருந்துள்ளார். பின்பு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சிபிஆர் 1996-ல் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க முக்கியக் காரணமாக இருந்தார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசு உயர் பதவிகள்

கட்சிப் பொறுப்புகளைத் தொடர்ந்து, அரசுப் பொறுப்புகளையும் சி.பி.ஆர். வகித்துள்ளார். இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநராகவும் பதவியேற்றார்.

தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றிய அவர், கடைசியாக மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்தியாவின் இரண்டாவது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவர் ஆகியுள்ளார். இது தமிழருக்குக் கிடைத்த கவுரவம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக குடியரசு துணைத் தலைவர் ஆக இருந்த ஜெகதீப் தன்கர், தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்க் கட்சிகளின் இண்டி கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறங்கினார். இந்தத் தேர்தல் இன்று (செப்.9) காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உட்பட மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

தபால் துறையின் 50 வருட சேவைக்கு முற்றுப்புள்ளி, செப்.1 முதல் கட் – இனிமே இப்படி தான், விலை?

Posted by - August 4, 2025 0
பதிவு அஞ்சல் சேவையை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நிறுத்துவதாக தபால் துறை அறிவித்துள்ளது. India Registered Post: பதிவு அஞ்சல் சேவையை கடந்த 50 ஆண்டுகளுக்கும்…

Smart TV வாங்கணுமா? 2025-ல் மக்கள் ஏன் மாறி மாறி வாங்குறாங்க… இதுதான் முக்கிய காரணங்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025 ஆரம்பிச்ச அதே நிமிஷத்துல இந்திய சந்தையில் Smart TV விற்பனை ரொம்ப வேகமா போய்கிட்டே இருக்கு. மக்கள் ஏன் தொடர்ச்சியா Smart TV-களுக்கு மாறிக்கிட்டு…

கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

Posted by - February 29, 2024 0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

Posted by - August 7, 2023 0
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *