சிதைந்த உடல்கள்… ரத்த கறையில் தண்டவாளங்கள்… பதற வைக்கும் விபத்துக்களம்

363 0

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 205க்கும மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.சிதைந்த உடல்கள்... ரத்த கறையில் தண்டவாளங்கள்... பதற வைக்கும் விபத்துக்களம்  | Limbless Bodies, Bloodbath On Tracks Survivor Recounts Odisha Train Crash

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மூன்று ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், ஒடிஷா ரெயில் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி அனுபவ தாஸ் என்பவர் தான் எதிர்கொண்ட திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பான பதிவில் அவர், “ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று மாலை ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது மோதியது. பின்னர், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.

ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்த நான், காயமின்றி தப்பியதற்கு கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது மிகப்பெரிய ரெயில் விபத்து. பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று பொது பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்கு நூறாக நொறுங்கின. எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன. ரெயில் தண்டவாளங்கள் எங்கும் ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்க முடியாத ஒரு காட்சி. விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார். அவர்களுக்கு எனது இரங்கல்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Post

கேரளாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு- 3 பேர் உயிரிழப்பு

Posted by - December 21, 2023 0
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது…

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

Posted by - December 9, 2024 0
பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு…

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை….

Posted by - April 6, 2023 0
பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். சென்னை: பிரதமர்…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *