சிவகுமார் நடிப்பை நிறுத்த இப்படி ஒரு காரணமா.? சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தும் வீணா போச்சே!

159 0

அந்த காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிவகுமாரின் படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வந்தது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிவகுமார் அதிகம் கடவுள் படங்களில் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருந்த சிவகுமார் மார்க்கெட் இறங்கிய பிறகு தன்னுடன் வயது மூத்த நடிகர்களுக்கு கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து வெள்ளிதிரையிலிருந்து சின்னத்திரையில் களம் இறங்கினார்.

ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன சித்தி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் சினிமாவை காட்டிலும் சீரியலில் நடிக்கும் போது தனக்கு நல்ல வருமானம் கிடைத்து வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் இருந்ததாக சிவகுமார் கூறியிருந்தார்.ஆனால் நடிப்பே வேண்டாம் என்று முழுக்கு போடவும் சித்தி சீரியல் தான் காரணமாக இருந்ததாம். அதாவது அந்த சீரியலில் பாசமலர் படத்தில் இடம் பெற்றது போல ஒரு காட்சி வந்ததாம். சிவாஜி எப்படி பாசமலர் படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக தூங்காமல் சாப்பிடாமல் இருந்து நடித்தாராம்.

அதேபோல் இந்த காட்சியும் தொடரில் வரவேண்டும் என்பதற்காக சிவகுமார் மெனக்கெட்டு சாப்பிடாமல் தூங்காமல் இருந்து அந்த காட்சியை நடித்தாராம். ஆனால் அவர் நடிக்கும் போது அருகில் இருந்த பெண் தனது பாய் பிரண்டுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாராம்.

இதனால் கடுப்பான சிவகுமார் ஏன் இப்படி சிரிக்கிறேனு கோபம் வந்து கேட்டிருக்கிறார். அதற்கு ஏன் சார் கத்துறீங்க, இதெல்லாம் டப்பிங்ல தான திரும்ப பேச போறீங்க என்று நக்கலாக கூறி இருக்கிறார். இவ்வளவு மெனக்கெட்டு நடித்தும் அங்கு சிவகுமாருக்கு எந்த மரியாதையும் கிடைக்கவில்லையாம்.

சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தும் வீணா போச்சே என அன்று தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டு இனி மேக்கப் போடக்கூடாது என்று முடிவெடுத்தாராம். அன்றிலிருந்து தற்போது வரை தான் நடிக்கவில்லை என்று சிவக்குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.

Related Post

கடன் வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.. விஜய் ஆண்டனி மேடையில் உருக்கம்

Posted by - May 28, 2025 0
நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து பிரபலம் ஆகி அதன் பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியவர். பிச்சைக்காரன் படம் அவர் கெரியரில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனால்…

ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

Posted by - November 16, 2023 0
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத்…

பிரபல தயாரிப்பாளர் மகளை திருமணம் செய்கிறாரா குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்- யார் அவர், வெளிவந்த விவரம்

Posted by - July 19, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. சமையல் ப்ளஸ் காமெடி கலாட்டா என இருக்கும்…

பிக் பாஸில் ரீஎண்ட்ரியாகும் 3 போட்டியாளர்கள் லிஸ்ட்.. உறுதியான தகவல்! யார் யார் பாருங்க

Posted by - November 21, 2023 0
பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் ஷோ தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என…

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்.. எப்படியோ தட்டு தடுமாறி முன்னேறிய பார்ட் 2 சீரியல்

Posted by - March 6, 2025 0
ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *