சிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி

364 0

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

வெள்ளியங்கிரி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி ஆகும்.இனி, வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி இல்லை..!

இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகம் இருக்கும். மலை மேல் அடிக்கடி காலநிலை மாற்றமும் ஏற்படும். ஜூன் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெள்ளியங்கிரி மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் சிவராத்திரி நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய 2 விழாக்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது சிவராத்திரி விழாவுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிவராத்திரி நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய 2 விழாக்களுக்கு மட்டுமே வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது சிவராத்திரி விழாவுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை 4 நாட்கள் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பிளாஸ்டிக் பாட்டில்களை மலையில் வீசுவதை தடுக்க புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்.

அதன்படி பக்தர்கள் மலை மீது கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.20 வசூலித்து ஸ்டிக்கர் ஒட்டப்படும். பக்தர்கள் மலையில் இருந்து இறங்கும் போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் கொடுத்து ரூ.20-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இதன் மூலம் வனப்பகுதியில் பாட்டில்கள் வீசுவது தடுக்கப்படும். எனவே மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Post

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 35 ஆக அதிகரிப்பு: 70-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

Posted by - June 20, 2024 0
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் தற்போது வரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து வரும்…

பூலாங்கிழங்கின் மகிமை.. கமகம பூலாங்கிழங்கு பொடி எப்படி செய்யணும் தெரியுமா? வேற லெவல் வெள்ளை மஞ்சள்

Posted by - January 6, 2024 0
சென்னை: கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்ட இந்த மூலிகையின் பயன்கள் என்னென்ன தெரியுமா?…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *