சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!

137 0

குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர் என்றால், சொல்லவே வேண்டாம். இதுபோன்ற நேரத்தில் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.குடிப்பதற்கு மட்டுமன்றி, குளிப்பதற்கும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். அதிக சூடு இருந்தால், அது சருமத்தில் வெடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்.காரமான அல்லது அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். குளிர்பானங்கள், பழச்சாறுகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம். பழச்சாறு நன்மை என்பதற்காக குடிப்பவர்கள், நேரடியாக பழமாகவே சாப்பிட்டு வரலாம்.கடைகளில் சமைக்கப்படும் உணவுகள், எந்த அளவிற்கு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்டிருக்கும் என்பது தெரியாது என்பதால், முடிந்தவரை அவற்றை தவிர்க்கவும். குறிப்பாக துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் உட்பட ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் ஃப்ரிட்ஜில் அதன் வெப்ப அளவு மிகக்குறைவாக இருக்கும். அது உடலுக்குள் அப்படியே செல்கையில், உடலின் வெப்ப அளவை பாதிக்கக்கூடும்.ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற மூச்சுக்குழாய் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அதிகாலையிலோ இரவு பனிக்காத்திலோ நேரத்துக்குப் பிறகோ நடைப்பயிற்சி செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்.மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி உட்பட ஏதேனுமொரு உடற்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வது நல்லது.பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும் என்பதால், அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டியிருக்கும். அதுபோன்ற நேரத்தில், சிறுநீர் கழித்த பின்னர் கை, கால்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். போலவே சிறுநீர் வரும்போது அடக்கி வைக்காதீர்கள். அது சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகக் கல் என பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்

Related Post

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

கதவை திறந்த பிக் பாஸ்.. மாயா செய்த விஷயம்! கடுமையான எச்சரிக்கை

Posted by - December 25, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் நேற்று விக்ரம் எலிமினேட் ஆனார். அவர் மாயா உடன் கடந்த ஒரு வாரமாக மோதலில் இருந்த…

48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்

Posted by - June 28, 2023 0
நடிகை ஷர்மிலி 80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் பற்றிய செய்திகள் தான் சமூக…

சன் டிவியை முந்தியதா விஜய் டிவி?

Posted by - February 10, 2024 0
சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருந்து வருகிறது. இரண்டு சேனல்களும் ரசிகர்களை கவர போட்டிபோட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்பு வருகின்றனர். தற்போது…

சத்து நிறைந்த கம்பு இனிப்பு ரொட்டி

Posted by - February 16, 2023 0
அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. தேவையான பொருட்கள்: கம்பு – 2 கப் வெல்லம் –…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *